Home Blog Page 3645

நுவரெலியாவில் நேற்று மாத்திரம் 28 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 611 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 28 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 307 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.

 

மியன்மாரின் ஆட்சியைக் கைப்பற்றியது இராணுவம்! முக்கிய தலைவர்கள் சிறைபிடிப்பு!!

மியான்மரில் இராணுவ புரட்சி ஏற்பட்டு ஆங் சான் சூகி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மியான்மர் நாட்டில் கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.

இந்தநிலையில் ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக ஆங் சான் சூகி கூறுகையில், நான் எங்கள் மக்களிடம் கடுமையாக பதிலளிக்க வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.

23 ஆம் திகதி இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

எதிர்வரும் பெப்ரவரி 23 ஆம் திகதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த தகவலை வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன் மூலம் கடந்த ஆண்டு முதல் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்கத் தலைவராக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இருப்பார். இந்திய வெளியுறவு அமைச்சர்எஸ். ஜெய்சங்கரின் கொழும்புக்கான மூன்று நாட்கள் விஜயத்தின் ஒரு மாதத்திற்குப் பிறகு இம்ரான் கானின் இந்த திட்டமிட்ட விஜயம் அமையவுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கடந்த 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்தார்.

யுத்த காலத்தில் இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்கிய நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்றாகும்.

அத்துடன் கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு ஆதரவாக பாகிஸ்தானும் முக்கிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகின்றது அமைச்சரவை!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் வாராந்த அமைச்சரவைக் கூட்டம் இன்று (01) திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டம் மிகவும் முக்கியத்துவம்மிக்கதாக கருதப்படுகின்றது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விவகாரம்குறித்து இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுவதால் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ள முடிவுகள் தொடர்பில் பிரதான தரப்புகள் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை வெளிநாட்டுக்கோ அல்லது பன்நாட்டு நிறுவனத்துக்கோ வழங்குவதற்கு அரச பங்காளிக்கட்சிகளான ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி, தூய ஹெல உறுமய உள்ளிட்டவை எதிர்பை வெளியிட்டுள்ளன. அரசுக்கு சார்பான அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இன்று அமைச்சரவை கூடுகின்றது.

‘தடுப்பூசி விடயத்தில் மலையக மக்களுக்கும் முன்னுரிமை வழங்கவும்’

இந்தியாவினால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ள கொவிட் 19 தடுப்புக்கான கொவிட்ஷீல்ட் தடுப்பூசியை, மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளையொட்டி கடமையாற்றும் சுகாதாரத் துறையினர், ஆசிரியர்கள் மாத்திரமன்றி, பெருந்தோட்ட மக்களுக்கும் முதியோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் பெற்றுக்கொடுக்க உடன் நடவடிக்கை எடுக்குமாறு, பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின்ஒருங்கிணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், சுகாதாரத் துறையினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் 19 தொற்றுப் பரவலுக்கு இலக்காகியுள்ள நாடுகளின் பட்டியலில், குளிருடனான காலநிலையையொத்த நாடுகளிலேயே பெரும்பாலும் இந்த வைரஸ் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.

அந்தவகையில், இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் காணப்படும் குளிருடன்கூடிய காலநிலையானது, இந்த கொவிட் 19 வைரஸ் தொற்றுப் பரவலை அதிகரிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தலாம் என்ற அச்சநிலை உள்ளது.

தவிர, இந்நாட்டில் கொத்தணி வாழ்க்கையை வாழ்ந்துவரும் மலையகப் பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு மத்தியில், இந்த வைரஸ் பரவல் அதிக வேகத்தில் பரவக்கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.

அதுமாத்திரமன்றி, அம்மக்களுடன் மக்களாகக் கடமையாற்றும் சுகாதாரத் துறையினர், ஆசிரியர்கள் உள்ளிட்ட தரப்பினர், பெரும்பாலும் பிரதேசம் தாண்டிச் சென்று கடமையாற்றுபவர்களாகவே அதிகளவில் காணப்படுவதால் அவர்களூடாகத் தொற்றுப்பரவல் ஏற்படும் வாய்ப்புகளும் காணப்படுகின்றன.

அவ்வாறான சில சம்பவங்களை, கடந்த காலங்களில் அவதானிக்கவும் நேர்ந்தது. அதனால், மலையக மக்களின் நலன் தொடர்பில் அதிக கரிசனை கொண்டு அம்மக்களுக்கும் அங்குள்ள முதியோர்களுக்கும், அவர்கள் மத்தியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மேற்படி தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, சுகாதாரத் துறையினரிடம் செந்தில் தொண்டமான் வலியுறுத்தியுள்ள அதேவேளை, மலையகத்துக்கு விநியோகிக்க ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ள தடுப்பூசிகளை விட அதிகமான தொகையை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

5 ஆம் திகதி பலத்தை காட்டுவோம் – போராட்டத்துக்கு இ.தொ.கா. அழைப்பு!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கான தொழிற்சங்க நடவடிக்கைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் மலையகம் உட்பட நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 5 ஆம் திகதி பணி புறக்கணிப்பு போராட்டத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அறைகூவல் விடுத்துள்ளது.

கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் இன்று 31.01.2021 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இந்த அறைகூவலை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 25 ரூபாயால் உயர்த்தி 725 ரூபாயாகவும், மேலும் 50 ரூபாய் கொடுப்பனவுடன் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு உள்ளிட்ட உற்பத்தி திறன் அடங்கிய தொகை ஊடாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு கம்பனிகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. இத்திட்டத்தை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் இந்த தொகையினை வழங்குவதற்காக கம்பனி தரப்பில் நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டன. அதில் கூட்டு ஒப்பந்தத்தை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு தோட்டத்திலும் பறிக்கப்படும் கொழுந்தினை இரண்டு கிலோகளாக அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை நாமும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களும் நிராகரித்தோம். இந்த நிலையில் எதிர்வரும் 6ம் திகதி சம்பள நிர்ணய சபையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

அதேநேரத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களுக்கிடையில் ஒற்றுமை இல்லை என்பது அவர்களின் எண்ணப்பாடாக உள்ளது. ஆகையால் எதிர்வரும் 5ஆம் திகதி தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தொழிலற்றவர்கள் என அனைத்து தரப்பினருடனும் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தினதும் ஒத்துழைப்புடனும், ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பு ஒன்றை நடத்தி கம்பனிகளுக்கு ஒற்றுமையை வெளிக்கொணரவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிபகிஷ்கரிப்பு அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல. மாறாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்கு காட்டப்படும் ஒற்றுமைக்காகவே. இவ்வாறான நிலையில் சம்பள விடயம் தொடர்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அவர்களின் நிலைபாட்டினை தெரிவித்து வரும் அதேவேளை பொது அமைப்புகளும் கருத்துகளையும் முன்வைத்து வருகின்றன.

கட்சி என்ற ரீதியில் கொள்கைகள் வேறுபாடாக இருந்தாலும் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொள்ள அவர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.அந்தவகையில் இந்த பணிபகிஷ்கரிப்புக்கு முழுமையான ஆதரவு கிட்டும் என நாம் பொதுவாக அழைப்பு விடுகின்றோம்.” – என்றார்.

63,644 பேருக்கு கொரோனா – 57,159 பேர் குணமடைவு!

நாட்டில் மேலும் 351 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2ஆவது அலைமூலம் இதுவரை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

57 ஆயிரத்து 159 பேர் குணமடைந்துள்ளனர்.

பூண்டுலோயா விபத்தில் இரு இளைஞர்கள் பலி

பூண்டுலோயா – கம்பளை பிரதான வீதியில் நியங்கந்தர பகுதியில் இன்று (31.01.2021) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பலியாகியுள்ளனர்.

கொத்மலையிலிருந்து பூண்டுலோயா பகுதியை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும் பூண்டுலோயா பகுதியிலிருந்து கம்பளை பகுதிக்கு சென்ற கனரக லொறியும் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் இராவணாகொடை கலப்பிட்டியவில் வசிக்கும் சந்தருவன் ரணசிங்க (வயது – 19) மற்றும் என்.ஜீ.தினேஷ் (வயது – 19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின் போது,

ஐந்து மோட்டார் சைக்கிள்களில் இளைஞர்கள் குழு ஒன்று சுற்றி திரிந்ததாகவும், அந்த சுற்றி திரிந்த குழுவில் ஒரு சைக்கிளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாகவும் தெரிவித்த பொலிஸார், மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞனின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் கனரக லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நாவலப்பிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிசாந்தன்

அல்பியன் தோட்ட ஆத்தடி மாரியம்மா ஆலயத்தின் வரலாறு

அக்கரபத்தனை அல்பியன் தோட்ட மக்களின் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்புடைய ஆலயம் ஆத்தடி மாரியம்மா.
தோட்டத்தின் பிரதான ஆலயமான முத்த்மாரியமாமன் ஆலய உற்சவத்தின் போது கரகம் மற்றும் காவடி பாலிக்கும் இடமாகவும் ஆலயம் மற்றும் இல்லங்களில் ஏற்படும் சுபகாரியங்களுக்கு தீர்த்தம் எடுத்துவரும் புனிதமான இடமாகும்.
ஹட்டன் நகரிலிருந்து போடைஸ் வழியாக டயகம செல்லும் போது அல்பியன் தோட்ட எல்லையில் இடதுபக்கமாக இந்த ஆலயம் அமைந்துள்ளது.
ஹட்டன் போடைஸ் அக்கரபத்தனை அல்பியன் பிரதேசங்களை இணைக்கும் மலை உச்சியில் இருக்கும் வனாந்தர பகுதியில் இருந்து ஊற்றெடுத்து ஓடி வரும் நீரோடையும் உயர்ந்த கறுப்பன் தேயிலை மரங்களும் செண்பக மரமும் ஆலயத்தை அழகுபடுத்துகிறது.ஆலயத்தின் தலவிருட்சமாக செண்பக மரம் காணப்படுகிறது.
செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தைக் காணலாம் என்றும் உயிர்களைப் படைக்கும் கடவுள் பிரம்மா கூறியிருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
திருத்தென்குடித்திட்டை, திருஇன்னம்பர், திருச்சிவபுரம், திருநாகேசுவரம், திருப்பெண்ணாகடம் முதலிய சிவத்திருக்கோயில்களிலும் திருச்சேறை, திருநந்திபுர விண்ணகரம் ஆகிய திருமால் கோயில்களிலும் தலவிருட்சமாகச் செண்பக மரம் விளங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது.
நடுகல்லிலான பதிவும் பீடம் மட்டுமே ஆரம்பத்தில் இருந்தது.2005ஆம் ஆண்டு புனருத்தானம் செய்து ஆலயத்தை கட்டி எழுப்பி தற்போது அழகாக காட்சியளிக்கிறது.
இந்த ஆலயத்தில் தற்போது பூசை வழிபாடுகளை தோட்ட பொதுமக்களின் உதவியுடன் 65 வயதான மாரிமுத்து இராஜகோபால் என்ற பூசாரி செய்து வருகிறார். இவருக்கு முன் இவருடைய பரம்பரையினரே வழிபாடுகளை செய்து வந்துள்ளனர்.
அல்பியன் தோட்ட மக்களின் பல்வேறு வேண்டுதல்களையும் அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வரும் ஆத்தடி மாரியம்மனுக்கு ஒவ்வொரு நாளும் விளக்கிட்டு எந்த நேரமும் பக்தி பரவசத்துடனேயே ஆலயம் காட்சியளிக்கிறது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பூசை நடைபெறும்.வருடத்தில் ஆடிமாதம் விசேட பூசை இடம்பெற்று அன்னதானம் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது.இந்தப் பாதையில் ஓடும் அனைத்து வாகன சாரதிகளும் ஆத்தடி மாரியம்மனை வழிபட்டு செல்வது வழக்கம்.
இந்த ஆலயத்தில் பூசை வழிபாடுகள் பாரம்பரிய முறையிலேயே இடம்பெறுகிறது.
பூசையின் போது தப்பு,மேளம், உடுக்கு போன்றவை இசைக்கப்படுகிறது.மாமிசம் மதுபானம் எந்தகாலத்திலூம் புழங்குவதில்லை அல்பியன் தோட்ட மக்களின் வழிபாட்டு தளங்களில் மிக முக்கியமான இடமாக ஆத்தடி மாரியம்மா விளங்குவது குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்ட மக்க்ள செறிந்து வாழும் இடங்களிலும் அவர்களின் பணித்தளங்களிலும் கருமாரியம்மன் காட்டுமாரியம்மன்,காட்டேரியம்மன ,வீட்டுமாரியம்மன்,அங்காயம்மன், ஆத்தடிமாரியம்மன் போன்ற பல பெயர்களை கொண்ட மாரியம்மன் வழிபாடுகள் உண்டு.அல்பியன் தோட்டத்தில் உள்ள ஆத்தடி மாரியம்மன் அங்கே இயற்கையாக பாய்ந்தோடும் குடிநீரை பாதுகாக்க அந்த தோட்டத்தில் உள்ள முன்னோர்களால் வழிபடப்பட்டி க்கலாம்.
எழுத்து – (அ.ரெ.அருட்செல்வம்)

கண்டியில் 82 பேருக்கும், நுவரெலியாவில் 16 பேருக்கும் நேற்று கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் நேற்றுவரை நுவரெலியா மாவட்டத்தில் 583 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 16 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 2ஆவது அலைமூலம் கண்டி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 226 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 82 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

சினிமா

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....

நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான்: வெங்கட் பிரபு

0
நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிட மாட்டான் என்று விஜய்யை சுற்றி வரும் சர்ச்சைகள் குறித்து வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால், முதல்வராக...

‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்னா நடிக்​கும் ‘கா​விய காதல்’

0
பாரத், ‘குடும்​பஸ்​தன்’ சான்வி மேக்​னா​ நடிக்​கும் படத்​துக்​கு, ‘காவிய காதல்’ என்று தலைப்பு வைக்​கப்​பட்​டுள்​ளது. அறி​முக இயக்​குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்​கும் இதில் பால சரவணன் முக்​கிய வேடத்​தில் நடிக்​கிறார். தேனி ஈஸ்​வர் ஒளிப்பதிவு...

செய்தி

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வில் பாகுபாடு காட்டுவது மனித உரிமை மீறல்!

0
தோட்டத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வு, எவ்வித பாகுபாடுமின்றி அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி iPEN நிறுவனத்தால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முறைப்பாடு நேற்று...

போர் நிறுத்த முயற்சி: பாகிஸ்தானுக்கு சீனா முழு ஆதரவு!

0
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்டு வரும் சமரச முயற்சிகளுக்கு சீனா தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான பணிகளை விரைவுபடுத்துமாறு சீன வெளிவிவகார...

‘ஜனநாயகன்’ ஓடிடி உரிமையை கைப்பற்ற கடும் போட்டி

0
தற்போதைய தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் கடைசி படமெனக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது என தெரியவருகின்றது. வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’....