Home Blog Page 197

ஜப்பான் கடல் உணவுக்கு சீனாவில் தடை!

 

ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீன அரசாங்கம் நிரந்தர தடை விதித்தது. மேலும் அந்த நாட்டின் சினிமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அண்டை நாடான தைவானை தங்களுடைய ஆட்சிக்கு உட்பட்ட பகுதியென கூறி போர் விமானங்களை பறக்கவிட்டும், போர் கப்பல்களை களம் இறக்கி சீனா அச்சுறுத்தி வருகிறது.

ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி, தைவானை சீண்டினால் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் வெகுண்டெழுந்த சீனா, ஜப்பானின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. மேலும் அந்த நாட்டிற்கு தங்களுடைய மக்கள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் மேலும் அறிவுறுத்தியது.

சீனாவின் மிகப்பெரிய உணவு ஆதாரமாக ஜப்பான் நாட்டின் கடல் உணவுகள் உள்ளன.

மீன்கள், இறால்கள், கடல் நண்டுகள், ஸ்குவிட்கள், ஆக்டோபஸ்கள் போன்றவை அங்கிருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இருநாடுகளிடையே ஆண்டுக்கு பல ஆயிரம் கோடிக்கு கடல் உணவுகள் ஜப்பானில் இருந்து சீனாவில் இறக்குமதியாகிறது.

இந்தநிலையில் ஜப்பான் கடல் உணவுகளுக்கு சீன அரசாங்கம் நிரந்தர தடை விதித்தது. மேலும் அந்த நாட்டின் சினிமாவுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்க ரணில் நாளை இந்தியா பயணம்!

இதொகாவின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை (21) இந்தியா செல்கின்றார்.

ஐதேகவின் முக்கிய பிரமுகரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இந்த தகவலை வெளியிட்டார்.

எனவே, நுகேகொடை கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க பங்கேற்பது சாத்தியமில்லை எனவும், இரண்டாம் தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதே ரணிலின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, ஜீவன் தொண்டமானின் திருமண நிகழ்வில் இலங்கையிலுள்ள மேலும் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள், இராஜதந்திரிகள் பங்கேற்கவுள்ளனர்.

நுகேகொடை கூட்டத்தில் பங்கேற்கமாட்டேன்: நவீன்

நுகேகொடையில் நாளை நடைபெறவுள்ள பேரணியில் பங்கேற்கப்போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.

கூட்டத்தில் பங்கேற்பீர்களா, இல்லையா என கட்சியின் செயலாளர் கேட்டார். இதன்போது பங்கேற்கப்போவதில்லை என தெளிவாக குறிப்பிட்டேன் என நவீன் திஸாநாயக்க தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்சக்களுடன் இனி ஒருபோதும் அரசியல் பயணம் கிடையாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரே இரவில் 470 ட்ரோன்கள், 48 ஏவுகணைகள் வீசி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்!

உக்ரைன் மீது ஒரே இரவில் 470 ட்ரோன்கள், 48 ஏவுகணைகளை வீசி கடுமையான தாக்குதலை நடத்தியது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி விரும்பினார். இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது.

அதை ஜெலன்ஸ்கி நிராகரித்ததால், கடந்த 2022ம் ஆண்டு பெப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. போரை நிறுத்த சர்வதேச அளவில் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி அடைந்தன.

இதற்கிடையில் இரு தரப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், உக்ரைன் மீது நேற்று முன்தினம் இரவு 470 ட்ரோன்கள், 48 ஏவுகணைகளை வீசி ரஷ்யா கடுமையான தாக்குதலை நடத்தியது. தாக்குதலுக்குப் பிறகு பற்றி எரியும் கட்டிடங்கள், சேதம் அடைந்த இடங்களின் வீடியோவை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார்.

தாக்குதலில் டெர்னோபில் பகுதியில் 9 மாடி குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமாகி உள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டர்கள் காயம் அடைந்தனர்.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியும் பற்றி எரியும் கட்டிடங்களில் தீயை அணைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லை நிர்ணயம் வேண்டாம்: பழைய முறைமையில் தேர்தலை நடத்தவும்: சஜித் அணி வலியுத்து!

தேர்தலை இழுத்தடிக்கவே எல்லை நிர்ணயம் பற்றி பேசப்படுகின்றது. அவ்வாறு செய்யாமல் மாகாணசபைத் தேர்தலை பழைய முறைமையில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜே.சீ. அலவத்துவல இவ்வாறு அறிவித்தார்.

“ மாகாணசபைகளில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லை. ஆளுநர்கள் ஊடாகவே அவை நிர்வகிக்கப்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தவறு என்பதை நாம் ஏற்கின்றோம். அன்று தவறு நடந்துள்ளது. எனினும், அது சரிசெய்யப்பட வேண்டும்.

பழைய முறைமையின்கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்தலாம். இதற்காக சாணக்கியன் எம்.பி. முன்வைத்துள்ள தனிநபர் சட்டமூலத்தை அரசாங்கம் தமது சட்டமூலமாக கொண்டுவந்து இதற்குரிய நடவடிக்கை எடுக்கலாம். நாம் அதற்கு முழு ஆதரவை வழங்குவோம்.” எனவும் ஜே.சீ. அலவத்துவல குறிப்பிட்டார்.

மரக்கறி விலைப்பட்டியல் (20.11.2025)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (20) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

பிறந்தநாளன்று இளம் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை: யாழில் பயங்கரம்!

பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் பிறந்தநாளன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தக் கொடூர சம்பவம் நேற்று புதன்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் யாழ். வடமராட்சி – கரணவாயில் இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியைச் சேர்ந்த இராஜகுலேந்திரன் பிரிந்தன் (வயது 29) என்பவரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

“கொல்லப்பட்ட இளைஞரின் கைபேசிக்கு நள்ளிரவு 12 மணியளவில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதையடுத்து, அவர் தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். வீதியில் அவரைத்
பின் தொடர்ந்தனர் என்று நம்பப்படும் இருவர் அவரை வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

வெளியே சென்ற மகனைக் காணவில்லை என்று பெற்றோர் தேடிச் சென்றபோது அவர் வீதியில் இரத்தக் காயங்களுடன் காணப்பட்டார். அவரை மீட்ட பெற்றோர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, கொலையாளிகளுக்கும் உயிரிழந்தவருக்கும் இடையே போராட்டம் இடம்பெற்றுள்ளது என்றும், இதன்போது, கொலையாளி என்று நம்பப்படுபவர் அணிந்திருந்த ரீசேர்ட்டின் கை பகுதி கிழிந்து கொல்லப்பட்டவரின் கையில் இருந்தது என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், கொலையான இளம் குடும்பஸ்தர் மோட்டார் சைக்கிளில் சென்றபோது அவரை மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் பின்தொடர்வதும் சி.சி.ரி.வி. கமரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது.

இதேசமயம், கொல்லப்பட்ட இளைஞர் பிரான்ஸ் நாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்தார் என்றும் ,அங்கு பெண் ஒருவரைப் பதிவுத் திருமணம் செய்திருந்தார் என்றும், அவர் பிரான்ஸுக்கு மீண்டும் செல்லவிருந்த நிலையிலேயே கொலை இடம்பெற்றுள்ளது என்றும் கூறப்படுகின்றது.

கொலைக்கான காரணம் தெரியவரவில்லை. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் மக்களிடம் சஜித் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!

“திருகோணமலை புத்தர் சிலை விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கூறிய கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். அந்தத் தமிழ் மக்களுக்கு சஜித் துரோகமிழைத்துள்ளார்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட எம்.பியுமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுகளுக்கான நிதி துக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் பேசுகையில்,

“திருகோணமலையில் புத்தர் சிலை ஒன்று பிரதிஸ்டை செய்த விவகாரம் தமிழ் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்று ரீதியாக பார்த்தால் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர்கள் எவரும் அரச அதிபர்களாகப் பதவி வகிக்கவில்லை.

திருகோணமலை மாவட்டத்தில் தமிழரின் இனப் பரம்பலை இல்லாதொழிப்பதற்குத் தொடர்ச்சியாகச் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன. இதனடிப்படையில் தான் அண்மையில் புத்தர் சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. அது இன்று இனவாதப் பூதமாக வெளிவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன பிக்குகளைக் கொண்டு தமிழ் மக்களுக்கு எதிராக அரசியல் செய்தார். இந்த அரசாங்கமும் அதே வழியிலேயே பயணிக்கின்றது.

திருகோணமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புத்தர் சிலை வைக்கப்படுகின்றது. அது பொலிஸாரால் அகற்றப்படுகின்றது. பின்னர் பொலிஸாரால் அதே இடத்தில் வைக்கப்படுகின்றது. இந்தச் சம்பவம் குறித்து சபையில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்தச் சம்பவத்தை தேசிய பிரச்சினையாகப் பார்க்க வேண்டும், புத்தர் சிலையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று ஆக்ரோஷமாகக் குறிப்பிட்டது ஆச்சரியமாக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெற்றால் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி தமிழ் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள். எனவே, சஜித் பிரேமதாஸ இந்தக் கருத்தை மீளப்பெற வேண்டும். தமிழ் மக்களிடம் அவர் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்.

தமிழர்களுக்குச் சஜித் துரோகமிழைத்துள்ளார். அவர் பகிரங்க மன்னிப்புக் கோரினால்தான் அது இந்த நாட்டில் ஒரு நீதியாக அமையும்.

இந்த நாட்டில் மதத்தை முன்னிலைப்படுத்தித்தான் காலம்காலமாக பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் 30 விகாரைகள் கட்டப்படுகின்றன. திரியாய் பகுதியில் இரண்டு சிங்களவர்களுக்காக ஒரு விகாரை கட்டப்படுகின்றது. கிழக்கில் பல இடங்களில் காணிகள் சட்டவிரோதமான முறையில் கைப்பற்றப்பட்டு விகாரைகள் கட்டப்படுகின்றன. அரசாங்கம் இதனைத் தடுக்க வேண்டும். இல்லையேல் இந்த நாட்டில் நல்லிணக்கம் இல்லதொழியும். இது மிகவும் அபாயகரமானது.

ஜனாதிபதியுடன் நடைபெற்ற சந்திப்பின் போது திருகோணமலை விவகாரம் பற்றி பேசினோம். அவரும் ஒருசில விடயங்களை ஏற்றுக்கொண்டார். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி சபையில் ஆற்றிய உரை நம்பிக்கையளித்துள்ளது. இருப்பினும் சகல விடயங்களிலும் நம்பிக்கைகொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்போது ஏன் யாழ். தையிட்டி விகாரை குறித்து அவதானம் செலுத்தவில்லை என்று கேள்வி எழுகின்றது. ஆகவே சிலைகளை அடிப்படையாகக் கொண்டு முரண்பாடுகள் திட்டமிட்ட வகையில் தோற்றுவிக்கப்படுகின்றன. அரசாங்கம் இதனைத் தடுத்தேயாக வேண்டும்.” – என்றார்.

இனவாதத்துக்கு எதிரான அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள்,உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்

வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி சி.வி.கே. சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீ தரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. ஸ்ரீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

புதிய அரசமைப்புக்குரிய பணி ஜனவரியில் ஆரம்பம்: தமிழரசுக் கட்சியினரிடம் ஜனாதிபதி தெரிவிப்பு!

நாட்டின் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது உட்பட்ட விடயங்கள் அடங்கிய அரசமைப்பை உருவாக்குவது தொடர்பான பொறிமுறை ஒன்றை புதிய ஆண்டு பிறந்ததும் – ஜனவரியில் – ஆரம்பிக்க முடியும் என்று இன்று பிற்பகல் தம்மைச் சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உயர்மட்டக் குழுவினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. அதன் பின்னர் அந்தச் சந்திப்புக் குறித்து தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் தெரிவித்தவை வருமாறு:-

“ஜனாதிபதி பதவி ஏற்று, அதன் பின்னர் அவரது அரசும் அதிகாரத்துக்கு வந்து, ஒரு வருடத்தின் பின்னர்தான் இப்போது இந்தச் சந்திப்பு இடம்பெற்று இருக்கின்றது.

அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தில் முதலாவதாகக் கூறிய விடயம் புதிய அரசமைப்பு ஒன்று வரும் என்பதாகும். அது விரைவாக, துரிதமாக நடைமுறைக்கு வரும் என்று கூறி இருந்தார்கள். ஆனால் ஒரு வருடமாகியும் தமிழ்த் தேசிய இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை கூறியிருந்தோம்.

அவர், அடுத்த ஜனவரியில் இருந்து நடவடிக்கை எடுப்பார் என எங்களுக்கு உறுதி அளித்திருக்கிறார்.

அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவை ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்று உறுதி கொடுத்திருந்தார். அதைச் சுட்டிக்காட்டினோம்.

அந்த உறுதிமொழியில் ஐம்பது வீதம் நடைமுறைப்படுத்தி விட்டோம், உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தி விட்டோம், மாகாண சபைத்  தேர்தலை நடத்துவதற்கு எங்களுக்கு இன்னும் சொற்ப காலம் தேவைப்படுவதாக அவர் கூறினார். ஆனால் நடத்துவோம் என்ற உறுதிமொழியை அவர் தந்தார். எனினும் எப்போது என்று அவர் சொல்லவில்லை.

மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறித்து எடுக்கப்படக்கூடாது, பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்கள் பற்றி எல்லாம் எடுத்துரைத்தோம்.

எங்கள் மாவட்டங்களிலேயே ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பிரச்சினைகள் பற்றி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்தார்கள். அந்த விடயங்களை எல்லாம் அவர் செவிமடுத்தார். எங்களோடு பேசினார். முக்கியமான பல விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன.

தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதான கட்சி என்ற முறையில் தொடர்ந்து இந்த விடயங்களை எங்களுடன் கலந்துரையாடி முன்னெடுப்பார் என அவர் உறுதியளித்திருக்கின்றார்.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து நாங்கள் பேசியிருக்கின்றோம். குறிப்பாக அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசியல் கைதிகள் என்ற சொற்றொடர் இருப்பதை நான் அவருக்கே சுட்டிக்காட்டினேன். அப்படிக் குறிப்பிட்டிருக்கையில் நாடாளுமன்றத்தில் அவரது அமைச்சர்கள், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று பேசி இருக்கின்றார்கள். அதையும் நான் அவருக்குச் சுட்டிக்காட்டினேன்.

அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ‘அரசியல் கைதிகள்’ என்று குறிப்பிடப்பட்ருப்பதை அவருக்குப் படித்தும் காட்டினேன். எட்டுப் பேர்தான் அப்படி இருக்கின்றார்கள். அவர்கள் நீண்ட காலம் இருக்கின்றார்கள். அதனைச் சுட்டிக்காட்டினேன். அவர்களின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் அவர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அவர்கள் குற்றவாளிகளாக கண்ட முறைமையே தவறு. அத்தோடு அவர்கள் நீண்ட காலம் சிறையில் இருக்கின்றார்கள். இவற்றைக் கவனத்தில் எடுத்து அவர்களை விரைந்து விடுவிக்குமாறு கேட்டிருக்கின்றோம். அது குறித்துத் தான் அவதானம் செலுத்துவார் என அவர் தெரிவித்திருக்கின்றார்.

திருகோணமலையில் புத்தர் சிலை வைக்கப்பட்ட விடயம் பற்றி நாங்கள் சுட்டிக்காட்டினோம். அங்கு எந்தக் காலத்திலும் புத்தர் சிலை இருக்கவில்லை. ஒரு விகாரை பக்கத்தில் இருந்திருக்கின்றது. அது சம்பந்தப்பட்ட ஒரு சின்னக் கட்டடம் அருகில் இருந்துள்ளது. அதைக்  குளிர்பானம் விற்பனை செய்யும் நிலையமாக மாற்றினார்கள். அது அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடம். அதனை அகற்றுவதற்கு நீதிமன்ற உத்தரவு இருந்த போது, அதனை அகற்றாமல் தடுப்பதற்காக, புத்தர் சிலை புதிதாகக் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என்பதை அவருக்கு நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றோம்.

இதை வைத்து இனவாதத்தைக் கிளப்புவதற்கு எல்லா பக்கத்திலும் ஆள்கள் இருக்கின்றார்கள். பிக்குமார் சிலர் இங்கிருந்து அங்கு சென்று இதனை ஊதிப் பெருப்பிக்க நடவடிக்கை எடுக்கின்றார்கள் என்பதைப் பார்த்திருக்கின்றோம். அதற்கு இடம்கொடுக்கக் கூடாது என்பது எங்களது திடமான கருத்து. அதேவேளை எங்களுடைய மக்கள் வாழுகின்ற பிரதேசங்களில் தேவையில்லாமல் அப்படி விகாரைகளை அமைப்பது தவறு என்பதைச் சுட்டிக்காட்டினோம்.

உதாரணத்துக்கு திரியாயில் இரண்டே இரண்டு பௌத்தர்கள்தான் இருக்கின்றார்கள். அங்கு இரண்டு விகாரைகள் கட்டப்படுகின்றன. குச்சவெளிப் பிரதேச செயலகத்தில் 38 விகாரைகள் புதிதாகக் கட்டப்படுகின்றன. பௌத்தர்கள் வாழும் இடத்தில், அவர்களுடைய வழிபாட்டுக்காக விகாரைகள் கட்டப்படுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் ஓர் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் காட்டுவதற்காக அப்படிச் செய்வது இனங்களுக்கு இடையில் எந்தவித நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்பதை ஜனாதிபதிக்குச் சுட்டிக்காட்டினோம்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

லுணுகலை பகுதியில் ஆட்டோ விபத்து: ஓட்டுநர் பலி!

0
லுணுகலை பகுதியில் முச்சக்கர வண்டி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 67 வயதுடைய, கங்கசறி புற ரெந்தபொல ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். லுணுகலை பொலிஸ்...

முழு அமைச்சரவையும் பதவி விலக வேண்டும்!

0
"தரம் குறைந்த நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் ஓர் அமைச்சரை மட்டும் பலிகொடுத்துவிட்டு அரசு தப்பித்துக்கொள்ள முடியாது. கூட்டுப் பொறுப்பேற்று ஒட்டுமொத்த அமைச்சரவையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர்...

மரக்கறி விலைப்பட்டியல் (24.04.2026)

0
மரக்கறி விலைப்பட்டியல் (24.04.2026) நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...