Home Blog Page 3971

கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? செய்ய வேண்டியதும், கூடாததும்

சீனாவின் வுஹானில் தொடங்கிய நோயான கொவிட்-19 என்றால் என்ன?

COVID-19 என்பது இதற்கு முன்பதாக நாம் தெரிந்திராத கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வைரஸ் ஆகும். ஏனைய கொரோனா வைரஸ்களைப் போலவே, இது விலங்குகளிடமிருந்து மனிதருக்கு வந்துள்ளது. இது உங்கள் நுரையீரல் மற்றும் சுவாசப் பாதைகளை பாதிக்கும் புதிய நோயாகும்.

இந்த கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் அறிகுறிகள் யாவை?

இந்த வைரஸ் நிமோனியாவை ஏற்படுத்தும். கொரோனாவால் நோய்வாய்ப்பட்டவர்கள் இருமல், காய்ச்சல், சுவாச சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். நோய் தீவிரமாகும் நிலையில் உறுப்பு செயலிழப்பு ஏற்படலாம். இது வைரஸ் நிமோனியா என்பதால், அன்டிபயோடிக்ஸ் (antibiotics) பயனளிக்காது. காய்ச்சலுக்கு எதிராக நம்மிடம் உள்ள அன்டி-வைரல் மருந்துகள் இயங்காது. இந்த வைரசிலிருந்து மீண்டுவருதல் என்பது எமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைப் பொறுத்தது. கொரோனாவால் இறந்தவர்களில் பலர் ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர்.

எனக்கு இருமல் இருந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டுமா?

இருமல் அல்லது அதிக உடல் வெப்பநிலை உள்ள எவரும் 14 நாட்கள் பொது இடங்களுக்கு செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். உங்களால் முடிந்தால் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உட்பட பிறரிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்பது மருத்துவ ஆலோசனையாகும். இது அனைவருக்கும் பொருந்தும். உடல்நிலை மோசமானால், அல்லது உங்கள் அறிகுறிகள் ஏழு நாட்களுக்கு மேல் நீடித்தால், நீங்கள் 117 ஐ அழைக்க வேண்டும். மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்கு முகமூடி அணிந்துகொள்ளுங்கள்.

பொது சுகாதர அதிகாரி (PHI), சுகாதார மருத்துவ அதிகார (MOH), பிராந்திய தொற்றுநோய் வல்லுநர் (RE) ஆகியோருக்கு அறிவிக்கவும்.

இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரவுகிறதா?

சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் ஜனவரி மாதத்தில் இந்த வைரஸ் மனிதனுக்கு மனிதன் பரவுவதை உறுதிப்படுத்தியது. இப்போது உலகம் முழுவதும் மனித பரவலுக்குள்ளாகியுள்ளது.

கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

இது ஒரு புதிய நோய் என்பதால், கொரோனா வைரஸ் ஒருவருக்கு ஒருவர் எவ்வாறு பரவுகிறது என்பது உறுதியாகத் தெரியாது. ஆனால் இந்த நோய் மூச்சினால் பரவக் கூடியதாக் கருதப்படுகிறது. எச்சில், இருமல் துளி, தொற்றுகளை ஏற்படுத்தும் துணி, பாத்திரங்கள், தளபாடங்களினால் பரவக்கூடியதாக் கூறப்படுகிறது.

எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்?

மார்ச் 15 ஆம் திகதி வரை, 80 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 156,000 இற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக அறிவியல் மற்றும் பொறியியல் மையம் தெரிவித்துள்ளது.

உலகளவில் 5,800 இற்கும் மேற்பட்ட இறப்புகள் நேர்ந்துள்ளன. அவற்றில் 3,000 இற்கும் மேற்பட்டவை சீனாவில் நிகழ்ந்துள்ளன. கொரோனா வைரஸிலிருந்து 73,000 இற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.

இது சாதாரண காய்ச்சலை விட ஏன் மோசமானது? வல்லுநர்கள் எவ்வளவு கவலைப்படுகிறார்கள்?

புதிய கொரோனா வைரஸ் எவ்வளவு ஆபத்தானது என்று இன்னும் தெரியவில்லை, மேலும் கூடுதல் தகவல்கள் வரும் வரை தெரியாது. பருவகால காய்ச்சல்கள் பொதுவாக 1% இற்கும் குறைவான இறப்பு விகிதத்தை கொண்டுள்ளதுடன், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 400,000 இறப்புகளை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. சார்ஸின் இறப்பு விகிதம் 10% க்கும் அதிகமாக இருந்தது.

அறியப்படாத மற்றொரு முக்கிய விடயம், கொரோனா வைரஸ் எவ்வளவு தொற்றும் தன்மையுடையது என்பதாகும். ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், ஏனைய காய்ச்சல்களைப் போலன்றி, புதிய கொரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி இல்லை. அதாவது பாதிக்கப்படக்கூடியவர்களான வயதானவர்கள் அல்லது ஏற்கனவே சுவாச அல்லது நோயெதிர்ப்பு பிரச்சினை உள்ளவர்கள் – தங்களைக் காப்பாற்றிக் கொள்வது மிகவும் கடினம்.

வேறு கொரோனா வைரஸ்கள் இருந்ததா?

Severe acute respiratory syndrome (சார்ஸ்) மற்றும் Middle Eastern respiratory syndrome (மெர்ஸ்) இரண்டும் விலங்குகளிடமிருந்து வந்த கொரோனா வைரஸ்களால் ஏற்படுகின்றன. 2002 ஆம் ஆண்டில், சார்ஸ் கிட்டத்தட்ட 37 நாடுகளுக்குத் தடையின்றி பரவி, உலகளாவிய பீதியை ஏற்படுத்தியது, 8,000 இற்கும் அதிகமான மக்களைப் பாதித்ததுடன், 750 இற்கும் மேற்பட்டோரைக் கொன்றது. மெர்ஸ் மனிதனிடமிருந்து மனிதனுக்கு எளிதில் கடத்தப்படுவதாகத் தோன்றுகிறது, அதிக மரணம் கொண்டது, பாதிக்கப்பட்ட சுமார் 2,500 பேரில் 35% பேர் கொல்லப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பீடிப்பதை அல்லது பரவுவதைத் தவிர்ப்பது எப்படி?

  • உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் அடிக்கடி கழுவவும் – இதை குறைந்தது 20 விநாடிகள் செய்யுங்கள்
  • நீங்கள் வீட்டிற்கு வரும்போது அல்லது வேலைக்குச் செல்லும்போது எப்போதும் கைகளைக் கழுவுங்கள்
  • சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் சானிடிசர் ஜெல் (hand sanitiser gel) பயன்படுத்தவும்
  • உங்கள் கைகள் சுத்தமாக இல்லாவிட்டால் உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடாதீர்கள்
  • நீங்கள் இருமும் போதோ தும்மும் போதோ உங்கள் வாய் மற்றும் மூக்கை ஒரு திசுவால் (tissue) மூடிக்கொள்ளவும்.
  • பயன்படுத்தப்பட்ட திசுக்களை உடனடியாக அப்புறப்படுத்தி, பின்னர் உங்கள் கைகளை கழுவவும்
  • முகமூடி அணிந்துகொள்ளவும்.
  • உடல்நிலை சரியில்லாதவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க முயற்சிக்கவும்

கொரோனா வைரஸுக்கு சிகிச்சை?

  • கொரோனா வைரஸுக்கு தற்போது குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை.
  • நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotics) வைரஸ்களுக்கு எதிராக செயல்படாததால், அவை கொரோவை தடுக்க உதவாது.
  • இந்த வைரசிலிருந்து மீண்டுவருதல் என்பது எமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையைப் பொறுத்தது.
  • நோயெதிர்பு சக்தியை அதிகரிக்கும் உணவு வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
  • நீங்கள் குணமடையும் வரை மற்றவர்களிடமிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும்.

வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருத்தலுக்கான உதவிக் குறிப்புக்கள்?

  • ஏனையோரிடமிருந்து குறைந்தது 2 மீட்டர் (3 அடிகள்) விலகியிருக்க முயற்சி செய்யுங்கள்
  • முடிந்தால் தனியாக தூங்குங்கள்
  • உங்கள் கைகளை சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் குறைந்தது 20 விநாடிகள் கழுவுங்கள்
  • ஏராளமான தண்ணீர், நீராகாரம் எடுத்துக்கொள்ளுங்கள்.

கீழ்வரும் அறிகுறிகளில் ஏதாவதொன்று உங்களுக்கு உள்ளதா?

  • அதிக வெப்பநிலை – உங்கள் மார்பில் அல்லது பின்புறத்தில் தொடும்போது நீங்கள் சூடாக உணர்கிறீர்கள்
  • ஒரு புதிய தொடர்ச்சியான இருமல் – இதன் பொருள் நீங்கள் மீண்டும் மீண்டும் இருமுகிறீர்கள்

உங்கள் வழமையான அன்றாட நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திவிடும் அளவுக்கு நீங்கள் மோசமாக இருக்கிறீர்களா?

(டிவி பார்ப்பது, தொலைபேசி பயன்படுத்துவது, படிப்பது, படுக்கையில் இருந்து எழுவது போன்ற வழக்கமான எதையும் செய்ய முடியாத அளவுக்கு உங்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறதா)

ஆம் எனில், 117 ஐ அழைத்து உடனடியாக உதவியைப் பெறுங்கள். கொரோனா வைரஸ் அறிகுறி தென்படுவதாகக் கூறுங்கள். மற்றவர்களுக்கு நோய் பரவாமல் இருப்பதற்கு முகமூடி அணிந்துகொள்ளுங்கள்.

பொது சுகாதர அதிகாரி (PHI), சுகாதார மருத்துவ அதிகார (MOH), பிராந்திய தொற்றுநோய் வல்லுநர் (RE) ஆகியோருக்கு அறிவிக்கவும்.

உதவி கிடைக்கும்வரை ஏனையோரிடமிருந்து விலகி இருங்கள்.

உங்கள் நிலமை மோசமாக இல்லை எனில், நீங்கள் வீட்டில் தங்கியிருக்க வேண்டும். குறைந்தது அடுத்த 7 நாட்களுக்கு ஏனையோரிடமிருந்து குறைந்தது 2 மீட்டர் (சுமார் 3 அடிகள்) விலகி இருங்கள்.

  • வீட்டியல் நீங்கள் செய்ய வேண்டியவை?
  • ஓய்வெடுத்து ஏராளமான நீராகாரம் அருந்தவும்.
  • இருமல் அல்லது தும்மும்போது வாயை ஒரு திசுவால் மூடிக்கொள்ளவும். பயன்படுத்தப்பட்ட திசுக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தவும்.
  • உங்கள் கைகளை வெதுவெதுப்பான நீர் மற்றும் சோப்புடன் குறைந்தது 20 விநாடிகள் கழுவ வேண்டும்
  • உங்கள் அறிகுறிகளை வீட்டிலேயே சமாளிக்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் அல்லது உங்கள் நிலை மோசமடைகிறது என்றால் 117 இற்கு அழைத்து அவசர உதவியை பெற்றுக்கொள்ளவும்.

நீங்கள் வீட்டில் தங்குவதை எப்போது முடிக்க வேண்டும்?

உங்கள் அறிகுறிகள் தொடங்கிய 7 நாட்கள் வரை நீங்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். 7 நாட்களுக்குப் பிறகு, நீங்கள் நன்றாக உணர்ந்தால், அதிக வெப்பநிலை இல்லை என்றால், நீங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.

உங்களுக்கு எந்த அறிகுறிகளும் தென்படவில்லை எனில், நீங்கள் இயல்பாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இருமல் இல்லை, அதிக உடல் வெப்பநிலை இல்லை. உங்களுக்கு கொரோனா வைரஸின் (COVID-19) அறிகுறிகள் தென்படவில்லை.

  • தொகுப்பு – நிருஷா கனகசபை

தீவிர வைரஸ்களுக்கு எதிராக உங்கள் உடல் எதிர்ப்பால் வெற்றிகொள்ளுதல்

COVID-19 தொற்றுக்குள்ளனாவர்கள் விசேட மாற்றமொன்றை அனுபவிக்கின்றனர். சிலர் தடிமலைத் தவிர வேறு நோய் அறிகுறிகள் எதுவும் இல்லையென கேள்விப்படுகையில், மேலும் சிலர் வைத்தியசாலையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டு அவர்களது நுரையீரல் வீக்கமடைந்து ஒருவகை திரவம் நிரம்புவதனால் மரணிக்கின்றனர். ஒரு வைரஸ் அவ்வாறான மாற்றங்களை எப்படி ஏற்படுத்தும்?

புதிய கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக முழு உலகமும் மிகுந்த கஷ்டம் மற்றும் குழப்பமடைந்துள்ளது. எனினும் நீங்கள் வைரஸினால் குனமடைகிறீர்களா இல்லாவிட்டால் அதனால் நீங்கள் இறக்கப் போகிறீர்களா என்பது தொடர்பில் நோய் எதிர்ப்பு கட்டமைப்பானது மிகவும் தீர்மானம் மிக்க நடவடிக்கையை மேற்கொள்கிறது என்பது தெளிவாக உள்ளது. உங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டவுடன் உங்கள் உடலில் உண்மையிலேயே என்ன நடக்கும், நீங்கள் பாதிப்படையாமல் இருப்பதற்கு உங்கள் உடலுக்கு உங்களால் எவ்வாறு உதவ முடியும் அத்துடன் இதனால் அதிகமாக பாதிப்படையும் அவதானும் யாருக்கு உள்ளது?

நோய் எதிர்ப்பு கட்டமைப்பின் செயற்பாடுகள்

நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் காலப்பகுதியில், உங்களை நோய்க்குள்ளாக்கும் பக்றீரியா, பங்கஸ் மற்றும் வைரஸ் போன்ற நோயை ஏற்படுத்தக்கூடிய வெடிகுண்டுகள் பின்தொடர்வதுடன் தொடர்ச்சியாக தாக்குதல்களையும் மேற்கொள்கின்றன. மனித உடலானது மிகவும் சத்தான பதார்த்தங்கள் பலவற்றைக் கொண்ட சூடான, மிகவும் சிறந்த சூழலைக் கொண்டுள்ளதனால் இந்த வகையான நுண்ணுயிர்களுக்கு அதிகமாக மற்றும் பலமடைவதற்கும் ஒரு சிறந்த இடமாக உள்ளது. உங்களது நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பு மிகவும் அவசியமடைவது இந்த சந்தர்ப்பத்தில் ஆகும். அது இவ்விதமாக ஆட்கொள்வோருக்கு எதிராக இருப்பது உங்கள் உடலிலுள்ள பாதுகாப்பு கட்டமைப் பொருத்தே ஆகும்.

புற்றுநோய், தைமஸ் சுரப்பி, எலும்பு மஜ்ஜை மற்றும் மூடப்பட்ட நிணநீர்களைக் கொண்ட எமது உடலில் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு உடலுக்குள் நுழையும் எந்தவொரு பக்றீரியா, வைரஸ் அல்லது ஒட்டுண்ணிகளை அடையாளம் கண்டு, அதனை இலக்கு வைத்து அதனை அழிக்கும். எலும்பு மஜ்ஜைகள் மூலம் Lymphocytes மற்றும் Leucocytes (வெண் குறுதி) உருவாக்குவதுடன் புற்றுநோய், தைமஸ் சுரப்பி, மற்றும் மூடப்பட்ட நிணநீரில் தேக்கி வைத்து விநியோகிக்க இடமளித்து தேவையான வேளையில் இந்த வெண் குறுதியை விடுவிக்கும்.

வயதுடன் ஏற்படும் மாற்றங்கள்

வயதுடன் எமது நோய் எதிர்ப்பு சக்தியின் பிரதிபலிப்புக்கள் மாற்றடையக் கூடும். லிமிஃபோசைட்ஸ் உற்பத்தி குறைவடைவது மட்டுமன்றி அதன் செயற்பாடுகளும் குறைவடையும். வயதானவர்கள் இளைஞர்களின் அளவிற்கு பலத்துடன் இல்லாதிருப்பதற்கு இதுவே காரணமாகும். விசேடமாக அவ்வாறு ஏற்படுவதற்கு காரணம் புதிதாக அல்லது முன்னர் எதிர்நோக்காத நோய்களே ஆகும். நாம் வயோதிமடையும்போது, எமது உடல் காலத்தோடு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதோடு இவற்றில் சில பலவீனமான உணவுப் பழக்கம், புகைப்பிடித்தல் அல்லது அதிகமாக மதுபானம் அருந்துதல் போன்ற காரணங்களினால் நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பு பலவீனமடையும். நாம் வயோதிபமடைகையில் ஏராளமாக காணப்படும் நீரிழிவு, நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய், Myelodysplasia, தன்னியக்க நோய் எதிர்ப்பு கோளாறுகள் போன்ற நோய்கள் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை பயன்படுத்த உதவியாக இருக்கும். வயதானவர்களுக்கு COVID-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது இதனாலேயே ஆகும்.

வைரஸ்கள் எதிர் நோய் எதிர்ப்பு கட்டமைப்பு

வைரஸ் மரபணு ரீதியாக எளிமையானது என்பதுடன் அவை அனைத்து இடங்களிலும் காணப்படும். அவை எமது உடலுக்குள் (இருமல் மற்றும் தும்மல், வணக்கம் வைத்தல்) காற்று, நுளம்பு போன்ற சிறிய பூச்சிகள் அல்லது எச்சில், இரத்தம் அல்லது விந்து போன்ற திரவங்களாலும் பரவுகின்றன. பொதுவாக சளி, இன்புளுவென்ஸா, சின்னமுத்து, டெங்கு மற்றும் எய்ட்ஸ் போன்றவை பெரும்பாலும் வைரஸ் காரணமாக ஏற்படக்கூடியவை. தனியாகவே அவைகளுக்கு ஒன்றும் செய்ய முடியாதபோதிலும் அவை மனித உடலுக்குள் புகுந்தவுடன், அவை உடலின் பல்வேறு கலங்களுக்குள் தொடர்புபடுவதுடன், வைரஸை அதிகளவில் பரப்புவதற்கு இந்த களங்களை தொழிற்சாலையாக பயன்படுத்துகிறது.

எமது உடல் வைரஸ் ஆதிக்கத்திற்கு பிரதிபலிப்பது உடல் எதிர்ப்புகளை உருவாக்குதன் மூலமாகும். இந்த உலகத்திலுள்ள மக்கள் தொகையை விட அதிகமாக எமது உடலில், உடல் எதிர்ப்புக்கள் உள்ளன. அதனால் எமது உடலுக்குள் வைரஸ் ஒன்று புகுந்தவுடனேயே எமது உடல் எதிர்ப்பு அதனை அடையாளம் கண்டுவிடும்.

வைரஸை அழிப்பதற்கு உடல் எதிர்ப்பு உதவி செய்யும் நடவடிக்கையின் போது, (இது நோய்எதிர்ப்பு பிரதிபலிப்பாகும்) பெரும்பாலான நோய் எதிர்ப்பு களங்கள் இயங்குவதுடன், எதிர்ப்புக்கு ஒத்துழைப்பு வழங்கும் பல்வேறு புரதங்களை பெருமளவில் உற்பத்தி செய்யும். எமது உடலில் ஏற்படும் இந்த நோய் எதிர்ப்பு பிரதிபலிப்பு இடையூறானது, நாம் காணும் காய்ச்சல், மற்றும் நடுக்கம், முகம் சிவந்திருத்தல் போன்ற நோய் அறிகுறிகள் சிலவாகும்.

சில சந்தர்ப்பங்களில் கட்டமைப்பிற்கு முழுமையாக புதிய வகை விலங்குகளினால் பிரவேசித்த COVID-19 போன்ற வைரஸ் காரணமாக எமது நோய் எதிர்ப்பு கட்டமைப்பு அடிபணிந்துவிடுகிறது. அவ்வாறு ஏற்படுவதற்கு காரணம் வைரஸை உடனடியாக அடையாளம் காணும் உடல் எதிர்ப்பு இல்லாமையினால் ஆகும். அதனால் வைரஸ் உடனடியாக வளர்ச்சியடைந்து பரவி எமது கட்டமைப்பிற்குள் பாரிய விளைவுகளை ஏற்படுத்த முடியும். எனினும் பொதுவாக நோய்எதிர்ப்பு கட்டமைப்பு இதுவரை Cytokine Stormஐ உருவாக்குவதுடன் அங்கு அந்த வைரஸ் அழிக்கப்படாததனால் அழற்சி பிரதிபலிப்பு (Inflammatory response) தொடர்ச்சியாக இடம்பெறுவதனால் அது கட்டுப்பாட்டிற்கு அப்பால் உள்ளது. இந்த இரக்கமற்ற அழற்சி பிரதிபலிப்பு மூலம் நுரையீரல், இதயம் மற்றும் சிறுனீரகம் உள்ளிட்ட கட்டமைப்புக்கள் செயலிழப்போடு உடலுக்குள் சிக்கல்களை ஏற்படுத்தும்.

நோய்க்கு எதிராக போராடுவதற்கு எமது வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல்

பொதுவாகவே ஆரோக்கியமாக இருக்கும் வாழ்க்கையைத் தழுவிய முறையைத் தவிர்ந்த திடீரென எமது நோய் எதிர்ப்பு கட்டமைப்பை அதிகரிக்க அல்லது மேம்படுத்த உண்மையிலேயே முடியாத விடயம். இதற்கு பழங்கள் மற்றும் மரக்கறி வகைகளை அதிகமாக உட்கொள்ளுதல், போதுமான அளவு தயாரிக்கப்பட்ட நொருக்கு தீன் பண்டங்களிலுள்ள எண்ணெய் மற்றும் கொழுப்பை அளவுடன் உட்கொள்ளுதல், தொடர்ச்சியான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உடல் நிறையை பேணுதல், அளவோடு மதுபான பாவனை, அளவான ஓய்வு, குறைந்த மன அழுத்தம் மற்றும் புகைபிடிப்பதை தவிர்த்தல் போன்றவை உள்ளடங்கும்.

கெட்ட வாழ்க்கை முறையை தெரிவு செய்வது எமது உடலுக்கு பல்வேறு விதமாக பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அது மறைமுகமான பல்வேறு நோய்தொற்றுக்களுக்கு வழியை ஏற்படுத்தும். உதாரணமாக, புகைபிடித்தல் எமது சுவாசக் குழாயின் உட்புறத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு இதனூடாக பக்றீரியா மற்றும் வைரஸ்களுக்கு நுரையீரலுக்குள் சென்று பல்வேறு பாதிப்புக்களை மேற்கொள்வதற்கு இலகுவாக இருக்கும். அதிகமான மதுபானம் மற்றும் பலவீனமான உணவுப் பழக்கம் மூலமும் சின்க், செலினியம், செப்பு, இரும்பு, ஃபோலிக் அமிலம், விற்றமின் C,A,B மற்றும் E மற்றும் Thiamine போன்ற மைக்ரோ போஷாக்கு கொண்ட குறைப்பாடுகளை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு கட்டமைப்பிற்கு உதவக்கூடிய புரதத்தை தயாரிக்கும் முக்கிய ஆதாரமாகவுள்ள எமது கல்லீரலுக்கு மதுபானம் பாரிய விளைவை ஏற்படுத்தும். மன அழுத்தம் மற்றும் முறையற்ற தூக்க பழக்கம் மறு புறத்தில், பலவீனமான உணவுப் பழக்கம், மதுபானம் அருந்துதல், மற்றும் புகைப்பிடித்தலுக்கு சமமாக எமது உடலை பாதிப்பிற்குள்ளாக்கும் ஏனைய விடயங்களை அதிகரிக்கச் செய்யும்.

விசேடமாக COVID-19 உடனான போராட்டத்தில், உங்கள் கைகளை எப்பொழுதும் கழுவுதல், நன்றாக சமைத்த இறைச்சி, மரக்கறி மற்றும் பழங்களை நன்றாக கழுவுதல் மற்றும் சுகாதார ரீதியாக குப்பைகளை கொட்டுதல் போன்றவை நோய்த் தொற்றுக்களை தவித்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல் – இவை இலகுவான விடயங்களாக இருந்தாலும் அநேக தூரம் செல்வதற்கு உதவியாக இருக்கும்.

ஊட்டச்சத்து கூடுவதனால் ஏற்படும் நன்மைகள்

சம்பிரதாய விட்டமின் C மூலம் சளி மற்றும் இன்புளுவென்ஸா போன்ற தொற்று நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும். என்றபோதிலும், உடலின் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பை பலப்படுத்துவது விற்றமின் C அடங்கிய உணவாகும். தொற்றுநோயைத் தடுப்பதற்காக துரிதமாக விற்றமின் C அளவை அதிகரித்தல், நேர்மறை அழுத்தத்தை ஏற்படுத்துமென விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படவில்லை. சளி அல்லது இன்புளுவென்ஸா ஏற்பட்டவுடன் விற்றமின் C எடுத்துக் கொள்வது நோயின் கால எல்லையை குறைத்துக் கொள்ள முடிவதை காணலாம். சீனாவில் அண்மைய அறிக்கைகள் காட்டுகின்ற விதமாக மிக உயர்ந்த வில்லையாக விற்றமின் C, COVID-19 தொற்றினால் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட நோயாளர்களின் நிலைமையை மேம்படுத்தியதை அவதானிக்க முடிந்தது. இந்த விடயம் விரிவான பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். அது எதுவாக இருந்தாலும் உங்களது முறையான உணவு வேளையின் இடைவெளியை நிரப்புவதற்காக பல தாதுக்கள் அடங்கிய பொதுவான மல்டி-விற்றமின்களை எடுத்துக் கொள்வது உகந்ததாகும்.

இறுதியாக

COVID-19 என்பது எமது நோய் எதிர்ப்பு கட்டமைப்பிற்கு பரீட்சயமில்லாத வைரஸ் ஆகும். அதனால் அதற்கு எதிராக போராடுவதற்கு எமக்கு உடல் எதிர்ப்பு இல்லை. அதனால் வைரஸ் எமது உடலுக்குள் பிரவேசித்தவுடன் நாம் சுகயீனமடைகிறோம். அதனால் இந்த வைரஸ் உடலுக்குள் நுழையும் நிகழ்வு அதிகமாகவுள்ளதனால் அதனை குறைத்துக் கொள்வதற்காக கைகளில் சரியான சுகாதாரத்தைப் பேணுதல், அனைத்து மக்களிடமிருந்தும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல், நீங்கள் வெளியில் இருக்கும் போது உங்கள் கைகள் அசுத்தமாக இருந்தால் உங்கள் வாய், மூக்கு அல்லது கண்களை தொடாமல் இருத்தல் போன்ற கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் பொதுவான சுகாதார ரீதியான வாழ்க்கை முறையை பின்பற்றுதல் மற்றும் நாள்பட்ட நோயை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை உறுதிப்படுத்தல், இந்த தீர்;மானம் மிக்க காலப்பகுதியில் மிகவும் முக்கியமானதாகும். இது மிகவும் கவலையை அளிக்கக் கூடிய உலகளாவிய கொள்ளை நோயாக இருப்பதுடன் இது இந்த நாட்டில் மட்டுமன்றி உலகத்திலுள்ள மக்களின் ஆரோக்கியத்தை மட்டுமன்றி பொருளாதார சீர்குலைவையும் ஏற்படுத்தியிருக்கிறது என்றால் ஐய்யமில்லை. அதனால் கவலை என்ற பொதுவான உணர்ச்சிகள் மற்றும் எதிர்வினைகள் உங்களது உயிரை தொந்தரவு செய்யாமல் இருப்பது முக்கியமாகும். இறுதியாக இந்த சந்தர்ப்பத்தில் நாம் அனைவரும் இதனை ஒன்றாக இணைந்து எதிர்கொள்வோம்!

இயக்குனர் விசு காலமானார்!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விசு உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

சம்சாரம் அது மின்சாரம், மணல்கயிறு ஆகிய படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குனரும், நடிகருமான விசு, அண்மைக்காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த விசு இன்று மாலை 5.30 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 74.

இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து இயக்குனர் ஆனவர் நடிகர் விசு.

நடிகர் ரஜினிகாந்த் உடன் மன்னன்,உழைப்பாளி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் நடித்துள்ளார். பல்வேறு படங்களில் கதை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

40 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்கார் விருது விழா ஒத்திவைப்பு

40 ஆண்டுகளில் முதல் முறையாக ஆஸ்கார் விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சிகள் 40 ஆண்டுகளில் முதல் முறையாக மாற்றியமைக்கப்படுகிறது.

கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் கதி கலங்கி நிற்கின்றன. ஹாலிவுட் முதல் அனைத்து மொழி பட உலகமும் முடங்கி கிடக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. சினிமா படப்பிடிப்புகள் நடக்கவில்லை.

இதனால் படங்களை இணையதளங்களில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஆஸ்கார் விருதுக்கு இணையதளத்தில் வெளியாகும் படங்கள் அனுமதிக்கப்படும் என்று விதிகளை தளர்த்தி ஆஸ்கார் குழு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு முன்பு தியேட்டர்களில் திரையிட்ட படங்கள் மட்டுமே ஆஸ்காருக்கு தகுதி பெற்றன.

அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற இருந்தது. தற்போது கொரோனாவால் விருது வழங்கும் விழாவை நான்கு மாதங்கள் தள்ளி வைத்து ஜூன் அல்லது ஜூலையில் நடத்த முடிவு செய்து இருப்பதாகவும், இதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தன

93 வது ஆஸ்கார் விருதுகள் இனி திட்டமிட்டபடி பெப்ரவரி 28 அன்று நடைபெறாது என்று அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் திங்களன்று அறிவித்து உள்ளது அதற்கு பதிலாக, 2021 ஏப்ரல் 25 ஆம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறும் என்று அந்த அமைப்பு கூறி உள்ளது.

தாமதத்திற்கு கூடுதலாக, அகாடமி படங்களுக்கான தகுதி சாளரத்தை நீட்டிக்க ஒப்புக்கொண்டது, 2021 ஆஸ்கார் விருதுகளுக்கு, புதிய சாளரம் பிப்ரவரி 28, 2021 வரை நீட்டிக்கப்படும். சமர்ப்பிக்கும் காலக்கெடுவும் நீட்டிக்கப்படும் என அமைப்பு கூறிஉள்ளது.

பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருதுகள் திகதியும் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. அவை ஏப்ரல் 11, 2021 க்கு திட்டமிடப்பட்டுள்ளன.

இலங்கை சில்லறை முதலீட்டு நிலப்பரப்பில், Softlogic Invest ஆரம்பம்

சொஃப்ட்லொஜிக் இன்வெஸ்ட், (‘Softlogic Invest’) சொஃப்ட்லொஜிக் கெபிட்டல் பி.எல்.சி.யின் எசெட் மெனேஜ்மென்ட் பிரிவு, இலங்கையின் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவிடம் (Securities Exchange Commission of Sri Lanka – SEC) chpkk) உரிமம் பெற்ற பின்னர் சொஃப்ட்லொஜிக் ஈக்விட்டி ஃபண்ட் (Softlogic Equity Fund)  மற்றும் சொஃப்ட்லொஜிக் மணி மார்க்கெட் ஃபண்ட் (Softlogic Money Market Fund)  ஆகிய இரண்டு யுனிட் டிரஸ்ட் நிதிகள் (ருnவை வுசரளவ) அல்லது பரஸ்பர நிதிகளை அண்மையில் ஆரம்பித்துள்ளது. சொஃப்ட்லொஜிக் நிதி சேவைகள் கூட்டின் ஊடாக தற்போதுள்ள நிபுணத்துவத்தை மூலதனமாக்குதல் – சொஃப்ட்லொஜிக் லைஃப் இன்சூரன்ஸில், சொஃப்ட்லொஜிக் ஃபைனான்ஸ் மற்றும் சொஃப்ட்லொஜிக் பங்குத்தரகர்கள் ஆகிய இந்த இரண்டு நிதிகளின் அறிமுகமானது சொஃப்ட்லொஜிக்கின் சொத்து மேலான்மை கிளை – சொஃப்ட்லொஜிக் அசெட் மெனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிட்டெட், நிதிச் சேவை இடைவெளியில் சில்லறைச் சந்தையில் நுழைவதைக் குறிக்கிறது. இந்த இரண்டு முதலீட்டு திட்டங்களும் மாதம் ஒன்றுக்கு 5000 ரூபா குறைந்தபட்ச முதலீட்டை செய்யக்கூடிய எவருக்கும் வழியை திறந்திருக்கும்.

சொஃப்ட்லொஜிக் இன்வெஸ்ட், முதலீட்டாளர்களுக்கு எளிய மற்றும் தனித்துவமான முதலீட்டு அனுபவத்தை வழங்குவதற்காக நிதி முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகிய இரு உலகங்களை ஒன்றிணைத்துள்ளது. இலங்கையில் ஒரு முதலீட்டு கலாச்சாரத்தை செயல்படுத்துவதன் மூலம், சொஃப்ட்லொஜிக் இன்வெஸ்ட் (‘ளுழகவடழபiஉ ஐnஎநளவ’) புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இலச்சினைகள் மூலம் மக்கள் தங்கள் கனவுகளையும் குறிக்கோள்களையும் அடைய முடியும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சொஃப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி.இன் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அசோக்க பத்திரன, “இலங்கையில் மிக முக்கியமான ஒரு சில முதலீட்டு வழிமுறைகளில் சொஃப்ட்லொஜிக் இன்வெஸ்டும் ஒன்றாகும். இது வெறும் 5000 ரூபாவுடன் முதலீடு செய்யத் தொடங்குவதற்கும், ஒரு பில்லியன் ரூபாய் முதலீட்டின் ஒரு பகுதியாக மாறுவதற்கும் வாய்ப்பளிக்கிறது. இன்றைய இளம் மற்றும் ஆர்வமுள்ள இலங்கையின் முக்கிய மற்றும் நம்பகமான சொத்து மேலான்மை வழிமுறைகளின் அடிப்படையில் ஒரு பெரிய இடைவெளியை நாம் காண்கிறோம். மேலும் சொஃப்ட்லொஜிக் முதலீட்டை அந்த பிரிவு பூர்த்தி செய்யும் இலச்சினையாக நாம் மாற்றுவோம் என நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

யுனிட் டிரஸ்ட் ஃபண்ட் (ருnவை வுசரளவ குரனெ) என்பது ஒரு கூட்டு முதலீட்டுத் திட்டமாகும், இது ஒரு கணக்கில் ஒன்றாக இணைகிறது. பின்னர் பணம் நிதிப் பத்திரங்களின் இலாகாவில் முதலீடு செய்யப்படுகிறது. மொத்த முதலீட்டின் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, நிகர சொத்து மதிப்பு பின்னர் அலகுகளின் எண்ணிக்கையால் வகுக்கப்படுகிறது, முதலீட்டாளர்களுக்கு யுனிட் உரிமையாளர்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஒரு யுனிட்டுக்கு அந்தந்த நிகர சொத்து மதிப்பாகும்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த சொஃப்ட்லொஜிக் கெப்பிட்டல் பி.எல்.சி.இன் முகாமைத்துவப் பணிப்பாளர் இஃப்திகார் அஹமட், “எங்களது இரண்டு யுனிட் டிரஸ்ட் ஃபண்டுகள் (ருnவை வுசரளவ குரனெ) ஆரம்பிக்கப்பட்டதன் மூலம், இலங்கையிலுள்ள சில்லறை மற்றும் தனியார் வளமான சமூகங்களுக்கு நிறுவனம் தரமான சலுகைகளைக் கொண்டு வருவதற்கான எங்கள் இலக்கை நாங்கள் இப்போது முழுமையாக உணர்ந்துள்ளோம். மேலும், இது சில்லறை மற்றும் தனியார் வளமான தடங்களிலிருந்து அதன் முதலீட்டு தீர்வுகளுக்காக சொஃப்ட்லொஜிக் இன்வெஸ்ட் அதிகரித்தமை தேவையின் பிரதிபலிப்பாகும்.” என தெரிவித்துள்ளார்.

சொஃப்ட்லொஜிக் ஈக்விட்டி ஃபண்ட் (ளுழகவடழபiஉ நுஙரவைல குரனெ) அதன் முதலீட்டாளர்களிடமிருந்து முற்பண கட்டணம் வசூலிக்காது. கொழும்பு பங்குச் சந்தையில் (ஊளுநு) பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்யும் ஒரு கீழ் இருந்து மேல் பங்குத் தேர்வு அணுகுமுறையைப் பயன்படுத்தி தீவிரமாக நிர்வகிக்கப்படுகிறது. அங்கு முதலீட்டாளர் நிறுவனங்கள் நிதி முகாமையாளர்கள் மற்றும் ஒரு ஆராய்ச்சி குழுவினரால் மதிப்பீடு செய்யப்படுகின்றன. ஒரு வருடத்திற்குள் முதிர்ச்சியடையும் “முதலீட்டு தரம்” (டீடீடீ மற்றும் அதற்கு மேற்பட்ட) என மதிப்பிடப்பட்ட நிறுவனங்களின் பணச் சந்தைப் பத்திரங்களில் முதலீடு செய்வதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு குறுகியகால வருமானம் மற்றும் பணப்புழக்கத்தை பணச் சந்தை நிதி வழங்குகிறது. முதலீடுகளுக்கு வருவாயைப் பெறுவதற்கான திறனுடன் – ஒரு நாளுக்குள் பணத்தைத் திருப்பப் பெறுவதற்கான விருப்பத்துடன் – முதலீட்டாளர்களுக்கு அவர்களின் மூலதனத்தைப் பாதுகாக்கும் அதேவேளையில் இலாப மேம்பாட்டை வழங்க பணச் சந்தை நிதி முயற்சிக்கிறது.

சொஃப்ட்லொஜிக் இன்வெஸ்ட் தொடர்பாக

‘சொஃப்ட்லொஜிக் இன்வெஸ்ட்’ என்ற இலச்சினை சொஃப்ட்லொஜிக் அசெட் மெனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனமாகும், இது சொஃப்ட்லொஜிக் கெபிட்டல் பி.எல்.சி.க்கு முழுமையாக சொந்தமான துணை நிறுவனமாகும், மேலும் இது சொஃப்ட்லொஜிக் குழுமத்தின் ஒரு பகுதியாகும், அத்துடன் இது இலங்கையின் ஹெல்த்கெயரில் ஆர்வமுள்ள மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் சில்லறை, ஐஊவுஇ டுநளைரசநஇ யுரவழஅழடிடைநள மற்றும் நிதிச் சேவைகள் ஆகியன அடங்கும். இந்நிறுவனம் தனிநபர் மற்றும் பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்கு மாறுபட்ட மூலதன சந்தை தேவைகளை வழங்குகிறது. மேலும் அனுபவம் வாய்ந்த பணிப்பாளர் குழு மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து மதுபானங்களினதும் தரம் குறைந்துள்ளதாக மதுபான தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிப்பு

நாட்டில் பிரதானமாக மதுபான தயாரிப்பில் ஈடுபடும் பெரும்பாலானவர்களினால் தயாரிக்கப்பட்டு மதுபானசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் மதுபானங்களை உட்கொண்ட பாவனையாளர்கள் பெரும்பாலானோர் பல்வேறு ஒவ்வாமை மற்றும் அசெகரியங்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் முன்னணி மதுபான தயாரிப்பு நிறுவனமொன்றின் அதிகாரி ஒருவர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் மதுபானசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்ட பெரும்பாலான மதுபானங்களின் தரம் மற்றும் சுவை குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த மதுபானங்களை உட்கொண்ட பலருக்கு தொண்டை வலி, தலை வலி மற்றும் அசாதாரண வாந்தி போன்ற பிரச்சினைகள் காணப்படுவதாக அந்த பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள முன்னணி மதுபான நிறுவனத்தின் அதிகாரி மேலும் தெரிவிக்கையில், உள்ளுர் தயாரிப்பின்போது எத்தினோல் மூலப்பொருட்களினால் மதுபானம் தயாரிக்கப்படுகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும் என சுட்டிக்காட்டியுள்ளார். எத்தினோல் என்ற மூலப்பொருளை இறக்குமதி செய்வதற்கு அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக கடந்த ஜனவரி முதல் எத்தினோலை இறக்குமதி செய்ய அரசாங்கம் தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, பெலவத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி செய்யப்படும் எத்தினோல் பயன்படுத்தப்பட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளதுடன், விநியோக நடவடிக்கைகள் இலங்கை கலால் திணைக்களத்தின் ஒப்புதலுடன் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று கலால் ஆணையர் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

WWE பிரபலம் அண்டர்டேக்கர் ஓய்வு

WWE எனப்படும் மல்யுத்தப் போட்டியில் பங்கேற்று உலகப்புகழ் பெற்ற ‘தி அண்டர்டேக்கர்’ தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

’’ரிங்கிற்குள் திரும்பி வர விருப்பமில்லை’’ என தி அண்டர்டேக்கர் கூறியுள்ள நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பற்றி புகழ்ந்து வருகின்றனர்.

மார்க் காலவே என்ற நிஜப்பெயரை கொண்ட 55 வயதான தி அண்டர்டேக்கர், சமீபத்தில் வெளியான ஒரு ஆவணப்படத்தில் தனது ஓய்வு குறித்து தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த 30 ஆண்டுகளாக WWE போட்டியில் பங்கேற்றுள்ளார். ’தி டெட்மேன்’ என்ற பட்டப்பெயரைக் கொண்ட இவரின் வாழ்க்கை வரலாறு குறித்து, ‘தி லாஸ்ட் ரைட்’ எனும் ஆவணப்படம் சமீபத்தில் வெளியானது.

சமீபத்தில் தனக்கும், ஏ.ஜே ஸ்டைல்ஸுக்கு இடையே நடந்த WWE போட்டி குறித்தும் தி அண்டர்டேக்கர் கருத்து தெரிவித்துள்ளார். இந்த போட்டியின் முடிவில் ஏ.ஜே ஸ்டைல்ஸை புதைத்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் தி அண்டர்டேக்கர் கிளம்பிச் செல்வார்.

‘’அது ஒரு மிகச்சிறப்பான தருணம். ஒருவர் ஓய்வு பெறும்போது முழு திருப்தி கிடைக்க வேண்டும் என்றால், இதுபோன்றதொரு தருணம் கிடைக்க வேண்டும்’’ என்கிறார் அவர்.

’’நான் ரிங்கிற்கு வெளியேதான் நிறைய நல்ல விஷயங்களைச் செய்துள்ளோன். அதை தொடர்ந்து செய்யும் இடத்திற்கு நான் இறுதியாக வந்துள்ளேன்’’ என கூறியுள்ளார் தி அண்டர்டேக்கர்.

கடைசி WWE போட்டியில் எதிராளியை புதைத்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் தி அண்டர்டேக்கர் கிளம்பிச் செல்வார்
கடைசியாக ஒரே ஒரு முறை போட்டியில் கலந்துகொள்வது குறித்து யோசித்து வருவதாகவும், ஆனால், அதற்கு காலம்தான் பதில் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்டர் டேக்கர் 3 முறை Heavy weight Champion, 6 முறை Tag Team Champion மற்றும் ராயல் ரம்புள் உள்ளிட்ட போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

1987-ம் ஆண்டு உலகத்தர சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டு தனது மல்யுத்த வாழ்க்கையை தி அண்டர்டேக்கர் துவங்கினார். பின்னர் 1990களில் இருந்து WWE போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.

ஒரு கோடி பேருக்கு கொரோனா பரவியது – 5 லட்சம்பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 82 ஆயிரத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 54 லட்சத்து 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 5 லட்சத்து ஆயிரத்து 309 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா’வின் பிடிக்குள் இருந்து 55 லட்சம்பேர் மீண்டனர்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியுள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப் பட்டது. தற்போது உலகில் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், கொரோனாவின் தாக்கமும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 2 லட்சத்தை கடந்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 55 லட்சத்து 57 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு 5 லட்சத்து 4 ஆயிரத்து 490 பேர் உயிரிழந்துள்ளனர்.

மலையக மக்களை பாதுகாப்பேன் – திகாம்பரம் சூளுரை

” திகாம்பரம் இருக்கும்மட்டம் மலையக மக்களை எவரும் சீண்டமுடியாது. கடந்த நான்கரை வருடங்களில் எவரும் சீண்டவும் இல்லை. சேவைகளை செய்துகாட்டிவிட்டே வாக்கு கேட்டுவந்துள்ளேன். மக்கள் உணர்வுப்பூர்வமாக வாக்களிப்பார்கள் என்பது உறுதி.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

கொத்மலையில் இன்று (28) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது.

” நான் அமைச்சரான பின்னர் நான்கரை வருடங்களில் எவ்வாறான சேவைகளை முன்னெடுத்துள்ளேன் என்பது மக்களுக்கு தெரியும். மலையக மக்கள் எங்கெல்லாம் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சேவைகள் செய்துள்ளோம்.

ஆனால் தேர்தல் காலத்தில் கண்டியில் இருந்து பரசூட் அரசியல்வாதிகள் இங்குவந்துள்ளனர். மக்கள் மத்தியில் பொய்யுரைத்து வாக்குகளை பிரிப்பதற்கு முயற்சிக்கின்றனர். நாம் இங்கேதான் பிறந்தோம். இந்த மண்ணில்தான் வாழ்கின்றோம். வென்றாலும்இ தோற்றாலும் இங்கிருந்து வெளியில் செல்லமாட்டோம்.

ஏற்கனவே ஒருவர் வந்தார். தேர்தலில் நின்றார். வென்றதும் ஓடிவிட்டார். ஆனால், எமது இளைஞர்கள் விழித்துக்கொண்டனர். அத்தகைய வேட்பாளர்களுக்கு இம்முறை தோல்வி உறுதி. சுமார் 15 ஆயிரத்துக்கும் மேல் வீடுகளை கட்டினேன். 8 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுவந்தன. ஆட்சிமாற்றத்தின் பின்னர் நிதி நிறுத்தப்பட்டது. ஆனால், கண்தெரியாத சிலர் 2 ஆயிரம் வீடுகள்தான் கட்டப்பட்டுள்ளன என கூறுகின்றனர்.

ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் வீடமைப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்போம். வேலைகளை செய்துவிட்டுவந்துதான் நாம் வாக்கு கேட்கின்றோம். மக்களாகிய நீங்கள் யாருக்கும் பயப்படவேண்டாம். நான் இருக்கின்றேன்.

தோட்டதுரைமார் மதிக்கமாட்டார்கள், பொலிஸார் அடிப்பார்கள் என சிலர் இன்று கருத்து வெளியிடுகின்றனர். அதற்கு நான் இடமளிக்கமாட்டேன். கடந்த நான்கரை வருடங்களில் எமது மக்களை எவரும் சீண்டுவதற்கு இடமளிக்கவில்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்.

எமது மக்களுக்கு 50 ரூபாவை எடுத்துக்கொடுப்பதற்கு முயற்சித்தேன். துரோகி நவீன் அதற்கு இடமளிக்கவில்லை. எமது மக்கள் உணர்வுப்பூர்வமானவர்கள். விலைபோகமாட்டார்கள். நுவரெலியாவில் 5 பிரதிநிதித்துவத்தை கடந்தமுறை வென்றெடுத்தனர். இம்முறையும் எமக்கு அமோக ஆதரவை வழங்குவார்கள். போலி வேட்பாளர்களை நம்பவேண்டாம்.” – என்றார்.

சினிமா

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

செய்தி

ஈரான் துறைமுகங்கள் முற்றுகை: ட்ரம்பின் திட்டத்துக்கு பிரிட்டன் எதிர்ப்பு!

0
ஹார்முஸ் நீரிணை பகுதியில் உள்ள ஈரானின் அனைத்து துறைமுகங்களையும் முற்றுகையிடும் அமெரிக்காவின் திட்டத்துக்கு ஆதரவளிக்கப்படமாட்டாது என பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். எரிசக்தி விலைகளைக் குறைப்பதற்காக ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட வேண்டும்...

நாகரிகம் அழியும் என்ற எனது கருத்தே ஈரானை பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்து வந்தது”

0
"நாகரிகம் அழியும்" என்ற எனது கருத்துதான் ஈரானைப் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டு வந்தது” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார். புளோரிடாவிலிருந்து மேரிலாந்தில் உள்ள ஜாயின்ட் பேஸ் ஆண்ட்ரூஸில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாகரிகம்...

ஆஸ்திரேலிய வரலாற்றில் முதன்முறையாக பெண் இராணுவ தளபதி நியமனம் !

0
125 வருடகால ஆஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் முதன்முறையாக இராணுவ தளபதி பதவிக்கு பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டுத் திறன்களுக்கான தளபதியாக (Chief of Joint Capabilities) பதவி வகிக்கும் சூசன் கோய்ல் (Susan Coyle), புதிய...