Home Blog Page 3997

சங்கக்காரவை அரசாங்கம் குறிவைத்தது ஏன்?

எதிரணி அரசியல்வாதிகளுக்கு எதிராக பழிவாங்கும் படலத்தை கட்டவிழ்த்துவிட்ட அரசாங்கம் இன்று தேசிய விளையாட்டு வீரர்களையும் வேட்டையாட தொடங்கியுள்ளது. எனவே, இந்த கொடூங்கோல் அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாடு ஏதேச்சதிகார பாதையை நோக்கியே பயணிக்கும். இதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றன – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டி, குண்டசாலை தேர்தல் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய வேலுகுமார் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” இனவாதம் பேசி, மதவாதத்தை தூண்டி குறுக்குவழியிலாவது ஆட்சியை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதற்காக ஒருபுறத்தில் பாடுபடும் அரசாங்கம், மறுபுறத்தில் எதிர்காலத்தில் தமக்கு அச்சுறுத்தலாக மாறுவார்கள் எனக் கருதப்படும் நபர்களை வேட்டையாடிவருகின்றது. நாம் எதையும் செய்வோம். அதற்கு எதிராக வாய் திறந்தால் கழுத்துக்கு கத்திவரும் என்ற எச்சரிக்கையை விடுக்கும் வகையிலேயே ஆளுங்கட்சியின் அணுகுமுறைகள் அமைந்துள்ளன. சங்கா, மஹேல போன்றவர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டதுகூட இதன்ஓர் அங்கமாகும்.

இலங்கை நாட்டுக்கு பெருமை சேர்ந்த சங்கக்கார, மஹேல ஜயவர்தன போன்றவர்கள் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தம்மால் முடிந்த சமுகசேவைகளை செய்துவருகின்றனர். நாட்டுக்கு எதிரான திட்டங்களை விமர்சிக்கின்றனர்.

சர்வதேச கிரிக்கெட் சபையின் தலைமைப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்துக்கு தெரிவாவதற்கான அனைத்து தகுதிகளும் சங்கக்காரவுக்கு இருக்கின்றது. எனவே, சங்கக்காரவின் பெயரை எவரும் பரிந்துரைக்காமல் இருப்பதற்கான சூழ்ச்சித்திட்டமா இந்த விசாரணை என்ற சந்தேகமும் எமக்கு எழுகின்றது.

ஆட்டநிர்ணய சதி தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கான தகவல்களை இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர். 2019 ஆம் ஆண்டு விளையாட்டு சட்டத்தின் பிரகாரம், ஆட்டநிர்ணய சதி தொடர்பில் தவறான தகவலை வெளியிட்டால் அந்த நபருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, ஆட்ட நிர்ணய சதி தொடர்பான தகவலை வெளியிட்ட அரசியல்வாதிக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை என்ன? ” – என்றார்.

‘1000 ரூபாவை வைத்து பூச்சாண்டி காட்டுகின்றனர்’

சம்பள உயர்வு விவகாரத்தில் தற்போது,“பூச்சாண்டி” காட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  ஆறு மாதங்களுக்கு முன்பிருந்து முன்வைக்கப்பட்டிருந்த ஆயிரம் ரூபா சம்பள உயர்வு தற்போதைய நிலைக்கு போதுமானதல்ல – என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஸ் தெரிவித்தார்.

வேட்பாளர் வடிவேல் சுரேஸ், பதுளையில் தமது வாசஸ்தலத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது, அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே, மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்,

“அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வாழ்வாதார செலவு உயர்வு ஆகியவற்றை ஈடுசெய்ய இவ் ஆயிரம் ரூபா சம்பள உயர்வினால் முடியாது. இது குறித்து, எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் நேரடியாக தெளிவுப்படுத்தியுள்ளேன்.

தேர்தலுக்குப் பின் சஜித் பிரேமதாச பிரதமரானதும், வாழ்க்கைச் செலவு உயர்விற்கமையவும், அவர் ஏற்கனவே கூறிய 1500 ரூபா  என்ற சம்பள உயர்விற்கு அப்பால் நியாயமான சம்பள உயர்வை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுப்பேன்.” – என்றார்.

சஜித் அணி இணைந்தால்கூட பதவிகள் வழங்கப்படாது – ஐ.தே.க.

பொதுத்தேர்தலின் பின்னர் சஜித் அணியினர் ஐக்கிய தேசியக் கட்சியில் மீண்டும் இணைந்தால்கூட அவர்களுக்கு எவ்வித பதவிகளும் வழங்கப்படாது என்று ரணில் அணி உறுப்பினரான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

” கூட்டணியொன்றை உருவாக்குவதற்கே ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியது. ஆனால், சஜித் தரப்பு கட்சியொன்றை உருவாக்கியது. அந்த கட்சியின் நிறம் நீலம். அதனை அவர்கள் வெளிப்படுத்துவதில்லை.

ஐக்கிய தேசியக்கட்சியின் பதவிகளுக்கு புதியவர்கள் நியமிக்கப்பட்டுவிட்டனர். தொகுதி அமைப்பாளர் பதவியில் ஏற்பட்டிருந்த வெற்றிடங்கள்கூட நிரப்பட்டுள்ளன.

பொதுத்தேர்தலின் பின்னர் இணைந்து செயற்படுவோம் என சஜித் அணியினர் கூறிவருகின்றனர். 20 ரூபா கொடுத்து அங்கத்துவம் பெறலாம். ஆனால், அவர்களுக்கு எவ்வித பிரதித் தலைவர், உப தலைவர், தேசிய அமைப்பாளர் என எவ்வித பதவிகளும் வழங்கப்படாது.” – என்றார்.

50 ரூபாவைக்கூட வழங்காதவர்களுக்கு வாக்குகளை அள்ளிக்கொடுப்பது சரியா?

” இந்திய அரசாங்கத்தின் நிதியில் மலையகத்தில் வீடுகளை கட்டினார்களேதவிர, நல்லாட்சியின்கீழ் மலையக மக்களுக்கு பெரிதாக எதுவும் செய்யப்படவில்லை.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். சதாசிவம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

 ” பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வழங்கப்படும் என தலவாக்கலையில் நடைபெற்றக் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார். ஆனால், அவர்களின் ஆட்சியில் 50 ரூபாவைக்கூட  தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட வீடுகளை இங்கு கட்டினார்கள். மற்றும்படி எம் மக்களுக்காக எதனையும் நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் செய்யவில்லை.இப்படி நடந்தும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளருக்கே வாக்குகளை அள்ளி, அள்ளி கொடுத்தீர்கள்.

எனவே, இம்முறையாவது ஆளுங்கட்சிக்கு வாக்களித்து, வெற்றியின் பங்காளிகளாக மாறுமாறு மலையக மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். என்னைப்போன்ற அனுபவமுள்ள அரசியல்வாதிகளால் நிச்சயம் சேவையாற்றமுடியும். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் என்னை நம்புகின்றனர். மக்களும் ஆதரவு வழங்குவார்கள்.” – என்றார்.

‘நான் கட்டிக்கொடுத்த வீடுகள் குருவிக்கூடா’ – திகா சீற்றம்

” தமிழ் முற்போக்கு கூட்டணியானது மலையக மக்களுக்காக உணர்வுப்பூர்வமாக சேவையாற்றியுள்ளது.” – என்று கூட்டணியின் பிரதித் தலைவரும், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

” எமது மக்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர்களால் மட்டுமே மலையகத்தில் அபிவிருத்திகளை முன்னெடுக்ககூடியதாக இருக்கும். எனவே, இப்படியானவர்களுக்கு வாக்களிப்பதா அல்லது தேர்தல் காலத்தில் வந்து விளையாட்டு பொருட்களை வழங்குபவர்களுக்கும், எங்கள் அப்பா செய்யாதவற்றை நான் செய்வேன் எனக் கூறுபவர்களுக்கும் வாக்களிப்பதா என மக்கள் முடிவெடுக்கவேண்டும்.

ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு நானும், ராதா அண்ணனுமே அமைச்சர்களாவோம். கடந்த நான்கரை வருடங்களில் நாம் இருவரும் மக்களுக்கு உணர்வுப்பூர்வமாக சேவைகளை செய்துள்ளோம். அவ்வாறு செய்துவிட்டே வாக்கு கேட்டுவந்துள்ளோம்.

எப்படிதான் சேவை செய்திருந்தாலும் நான் கட்டிய வீட்டை குருவிகூட என விமர்சிக்கின்றனர். நான் குருவிகூடாவது கட்டிக்கொடுத்தேன். அவர்கள் அதையாவது செய்தார்களா? ” – எனவும் திகாம்பரம் கேள்வி எழுப்பினார்.

மலையகத்துக்கு தேவை பண அரசியலா, நேர்மை அரசியலா?

” நம்மவர்கள்தான் நம்மை ஆள வேண்டும். எனவே, கொழும்பில் இருந்தும், கண்டியில் இருந்தும் வருபவர்கள் தீபாவளி காலத்தில் வியாபாரம் செய்ய வருவது போல் வருவார்கள். சீசன் முடிவடைந்ததும் சென்றுவிடுவார்கள். இவர்களை நம்பக்கூடாது.”

இவ்வாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பிலிப்குமார் தெரிவித்தார்.

”  மலையகத்துக்கு தேவை பண அரசியலா, நீதி, நேர்மை மற்றும் வெளிப்படைதன்மை மிக்க அரசியலா என்பது குறித்து சிந்தித்தே மக்கள் முடிவெடுக்கவேண்டும்.” எனவும் அவர் கூறினார்.

113 நாட்களுக்கு பின்னர் மாணவர்களுக்காக பாடசாலைகள் திறப்பு

மலையகத்தில் அமைந்துள்ள பாடசாலைகளுக்கு இன்று (06.07.2020) சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி சமூகமளித்திருந்த 5ம்,11ம், மற்றும் 13ம் தர மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக ஸ்தம்பிதமடைந்திருந்த மாணவர்களின் கல்வி நடவடிக்ககைள் 113 நாட்களுக்கு பின்னர் இன்று (06.07.2020) ஆரம்பிக்கப்பட்டன.
அத்துடன், மாணவர்கள் பாடசாலைகளில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு அதிபர், மற்றும் ஆசிரியர்களினால் அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி முகக்கவசம் அணிந்து வந்த மாணவர்கள் பாடசாலை நுழைவாயிலுக்கு முன்னால் உள்ள இடத்தில் கைகளை கழுவினர். அதன்பின்னர் ஆசிரியர்களினால் உடல் உஷ்ணம் கணிப்பிடப்பட்டது. அதன்பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
5 ஆம் தர மாணவர்களுக்காக காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை கற்பித்தல் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி முதல் தரம் 12 மற்றும் 10 மாணவர்கள் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 3, 4, 6, 7, 8 மற்றும் 9 ஆம் தர மாணவர்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இறுதி கட்டமாக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி தரம் 1, 2 மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கவுள்ளன.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றியே இவ்வாறு மாணவர்கள் கட்டம் கட்டமாக பாடசாலைகளுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
க.கிசாந்தன்

‘சஜித்தை பிரதமராக்குவதே எமது இலக்கு’

சஜித் பிரேமதாசவை பிரதமராக்குவதே எமது தற்போதைய இலக்காக இருக்கின்றது – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட வேட்பாளர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

” பதுளை மாவட்டத்தில் வாழும் தமிழ் மக்களின் இருப்பையும், கலை – கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை நாம் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.  அப்படியானால் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் மக்கள் வாக்களிக்கவேண்டும்.” – எனவும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.

மன்னாரில் மாயமான மர்ம நபர்: புறமுதுகில் பொதியுடன் தேவாயலத்திற்கு வந்ததால் சர்ச்சை : மன்னாரில் தேடுதல்

மன்னாரில் பேசாலை பகுதியில் பொதியொன்றுடன் சுற்றித் திரிந்த நபர் ஒருவர் மாயமானதால் அந்தப் பிரதேசத்தில் தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

மன்னார் பேசாலை பகுதியில் உள்ள வெற்றிநாயகி தேவாலயத்திற்கு நபர் ஒருவர் சனிக்கிழமை மாலை வந்துள்ளார். இவர் பின்முதுகில் பையுடன் காணப்பட்டுள்ளார். இவரிடம் அங்கிருந்தவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். எனினும், அதற்கு மழுப்பலாக பதில் கூறிய நிலையில், இந்த நபர் குறித்து அருட்தந்தைக்கு அங்கிருந்தவர்கள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே குறித்த நபர் அங்கிருந்து காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அருட்தந்தை பொலிசாருக்கு அறிவித்துள்ளார். பொலிசார் குறித்த பிரதேசத்தில் விசாரித்தும், தேடுதல் நடத்தியும் வருகின்றனர். குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் உதவியுடன் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனினும், குறித்த நபர் எங்கு மாயமானார் என்பது குறித்து உரிய தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை என மன்னார் செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பாக வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் தம்மிக்க, மன்னார் பொலிஸ் அத்தியட்சகர், ஆகியோர் பேசாலை பிரதேசத்திற்கு வந்து, பங்குத்தந்தையுடன் விடயங்களை ஆராய்ந்து சென்றுள்ளனர்.

அத்துடன். குறித்த பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

  • ஹஸ்மத்

 

‘கொரோனா’ – உலகளவில் பலி எண்ணிக்கை மேலும் உயர்வு!

உலக அளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 34 ஆயிரத்து 419 உயர்ந்துள்ளது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் வியாபித்துள்ளது. உலக முழுவதும் உக்கிர தாண்டவ ஆடி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இதன் காரணமாக மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவது முகக்கவசம் அணிவது ஆகியவற்றின் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்துகிறது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில், உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11,435,299
ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 534,519 ஆக கூடியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,473,428 ஆக உள்ளது.

சினிமா

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

செய்தி

ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய சித்திரா பௌர்ணமி விழா

0
நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சித்திரா பௌர்ணமி முத்தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பால்குட பவனி இன்று (30.04.2026) வியாழக்கிழமை காலை மிக விமரிசையாக நடைபெற்றது. இன்று காலை 9.00 மணியளவில் நுவரெலியா லேடி...

‘வாழ்வுரிமை’க்காக டேசன் தோட்டத்தில் 2ஆவது நாளாகவும் தொடர்கிறது போராட்டம்!

0
கம்பளை, புப்புரஸ்ஸ – டெல்டா வடக்கு (டேசன்) தோட்டப் பகுதி மக்கள் இன்று (30) இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 'டித்வா' பேரிடரால் குறித்த தோட்டத்தில் பாதிக்கப்பட்ட 22 குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகளை...