Home Blog Page 94

எப்.சி.ஐ.டியில் முன்னிலையாக கால அவகாசம் கோரினார் ஷிராந்தி!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாவதற்கு கால அவகாசம் கோரியுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ச இன்று FCID க்கு அழைக்கப்பட்டிருந்தார்.

எனினும், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் இன்று முன்னிலையாக முடியாது என இற்கு ஷிராந்தி ராஜபக்ச தெரியப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இரு வாரங்கள் கால அவகாசமும் கோரியுள்ளார்.

மரக்கறி விலைப்பட்டியல் (27.01.2026)

மரக்கறி விலைப்பட்டியல் (27.01.2026)

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (27) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்…

ஷிராந்தி ராஜபக்ச விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ச,   பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு (எப்.சி.ஐ.டி.) இன்று (27) அழைக்கப்பட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் “சிரிலிய” எனும் பெயரில் நடத்திசெல்லப்பட்ட வங்கி கணக்கில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை இடம்பெற்றுவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகவே ஷிராந்தி ராஜபக்ச  அழைக்கப்பட்டுள்ளார்.

இன்று முற்பகல் 9 மணியளவில் அவர் (எப்.சி.ஐ.டி.) முன்னிலையாக வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாட்டை நாசமாக்கியவர்கள் மீண்டும் ஆட்சிக்குவர இடமளிக்ககூடாது: பொன்சேகா!

நாட்டை கடந்த காலங்களில் நாசமாக்கியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு இடமளிக்ககூடாது. அதற்குரிய அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

“ நாட்டில் தற்போதுள்ள எதிரணிகளின் கூட்டணியானது கள்வர்களின் ஒன்றிணைவாகும். அதனால்தான் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால் மற்றையவர்கள் குழப்புகின்றனர்.

நாட்டில் முன்னர் இருந்த பழைய அரசியலை முன்னெடுப்பதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. இதற்கு மக்கள் இடமளிக்க கூடாது. மக்களுக்காக அல்ல தமக்காகவே அந்த தரப்புகள் அரசியல் நடத்துகின்றன.

இலங்கையில் கடந்த காலங்களில் சட்டம், ஒழுங்கு இருக்கவில்லை. பணம் இருக்கும் இடத்தில்தான் நீதி இருந்தது. ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. குறுக்கு வழியில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதனால் பொதுமக்கள்தான் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் உள்ளவர்கள் ஊழல், மோசடிகளில் ஈடுபடவில்லை. இதற்குரிய பாராட்டை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

அதேபோல நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் விடயங்களை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும். அதனை நோக்கிய பயணத்தின்போது எமது ஆதரவு வழங்கப்படும்.” என்றார் பொன்சேகா எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.

வெற்றிவாகை சூடப்போகும் அணி எது? இன்று பலப்பரீட்சை!

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் ODI போட்டி இன்று (27) நடைபெறுகின்றது.

3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில், இன்றைய இறுதி ஆட்டதில் வெல்லும் அணியே தொடரில் வெற்றிவாகை சூடும்.

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இலங்கை நேரப்படி போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பமாகும்.

முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணியும் வெற்றிபெற்றன.

இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் 30 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

தோட்ட தொழிலாளரிடம் மன்னிப்புக் கோரிய தோட்ட முகாமையாளர்!

ஜீவன் தொண்டமானின் கண்டனத்தையடுத்து லெதன்டி–மால்ப்ரோ தோட்ட தொழிலாளரிடம் மன்னிப்புக் கோரிய தோட்ட முகாமையாளர்!

ஹட்டன் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட லெதன்டி தோட்டத்தின் மால்ப்ரோ பிரிவில் இம்மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக தீர்வினைப் பெறும் நோக்கில் கலந்துரையாடலொன்று இன்று (26) ஹட்டன் தொழில் தினைக்களத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பிரதித்தலைவர் கணபதி கனகராஜ், ஹட்டன் மாநில சிரேஷ்ட இயக்குனர்/உத்தியோகஸ்த்தர் விஸ்வநாதன், தோட்ட முகாமையாளர் மஞ்சுல சமரகோன், பிரதி முகாமையாளர் ரத்வத்த சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மால்ப்ரோ தோட்டத்தின் பிரதி முகாமையாளர், குறித்த தோட்டத் தொழிலாளர் ஒருவரிடம் தகாத வார்த்தைகளால் பேசியமை தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அன்றைய தினமே பாராளுமன்றத்தில் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், உரிய முறையில் மன்னிப்புக் கோர வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மொழி தொடர்பான தவறுதலால் இவ்வாறு நடந்ததாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்ட தோட்டத் தொழிலாளரிடம் தோட்ட முகாமையாளர் நேரடியாக மன்னிப்புக் கோரினார். மேலும், இனிமேல் இவ்வாறான தவறுகள் இடம்பெறாத வகையில் நடந்து கொள்வதாகவும் அவர் வெளிப்படையாக உறுதியளித்தார்.

இதனையடுத்து, ஜீவன் தொண்டமான் எம்.பியுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட தோட்ட முகாமையாளர், மீண்டும் மன்னிப்புக் கோரியதுடன், தொழிலாளர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இத்தகைய தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டுமென ஜீவன் தொண்டமான் வலியுறுத்தினார்.

மேலும், தோட்ட நிர்வாகம் தொடர்பாக தொழிலாளர்கள் முன்வைத்த பிரச்சினைகளுக்கு தோட்ட முகாமையாளரால் சாதகமான பதில்கள் வழங்கப்பட்டமையால், இந்த கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் க்கு தமது நன்றியைத் தெரிவித்தனர்.

கல்வி மறுசீரமைப்பை முறையாக முன்னெடுத்த ஆதரவு!

“பலவீனமான இந்த அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்கும் திட்டத்தில், 6 ஆம் தர பாட அலகுச் சீர்திருத்தங்களைச் முறையாக முன்னெடுக்கத் தவறியதால் ஏராளமான பிள்ளைகள் இன்று பல்வேறு பாதிப்புக்களைச் சந்தித்துள்ளனர்.

கல்விச் சீர்திருத்தங்களை இடைநிறுத்திய பழியை எதிர்க்கட்சியின் மீது போடுவதற்கு அரசாங்கம் முயன்ற போதிலும், அந்த சீர்திருத்தங்களை தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே இடை நிறுத்தியது.

6 ஆம் தரம் முதல் கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படும் இலட்சக்கணக்கான பெற்றோர்களும் பிள்ளைகளும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாலும், அரசாங்கம் இதனை ஒத்தி வைத்ததன் காரணமாக அவர்களின் எதிர்பார்புகள் கானல் நீராக மாறிப்போயுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, கல்வித் துறையைச் சேர்ந்த நிபுணர்களுடன் கலந்துரையாடி, ஆபாச விடயங்களை நீக்கி, சரியாகவும் விரைந்தும் இந்த வருடமே இந்த கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கல்வித் துறையில் முற்போக்காக செயற்படும் நிபுணர்கள் காணப்படுகின்றனர். அவர்களுடன் கலந்துரையாடி முற்போக்கான முடிவை எடுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன் என்றும், கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக இந்த அரசாங்கம் முறையான கலந்துரையாடலை முன்னெடுத்தால், எதிர்க்கட்சியும் தங்கள் கருத்துக்களை முன்வைக்கத் தயார் என்றும் இந்த சீர்திருத்தங்களை முறையாக முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பைப் பெற்றுத் தர நாம் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

இன்றைய தினம் (26) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

கல்வி மறுசீரமைப்பு குறித்து நுவரெலியாவில் கலந்துரையாடல்!

நுவரெலியா மாவட்டத்தின் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த கலந்துரையாடல் நேற்று (25) நுவரெலியா காமினி தேசிய பாடசாலையில் நடைபெற்றது. கல்வி சீர்திருத்தங்களுக்கான தேசிய இயக்கத்தால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது,

மேலும் புதிய கல்வி சீர்திருத்தங்களுக்காக வாதிடும் ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

மகா சங்கத்தினர், அருட் தந்தையர்கள், அருட் சகோதரிகள், காமினி தேசிய பாடசாலையின் அதிபர் கரகஹவுல்பத பன்னரதன தேரர், சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் டாக்டர் உபாலி பன்னிலகே, கல்வி மற்றும் உயர்கல்வி துணை அமைச்சர் மதுர செனவிரத்ன, நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் மஞ்சுள சுரவீராராச்சி, மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதி கல்விப் பணிப்பாளர் விக்னேஸ்வரன், நுவரெலியா வலய கல்விப் பணிப்பாளர் திஸாநாயக்க, ஊவா பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் இந்திக தென்னகோன், பொறியாளர் அசங்க பாலம்கும்புர, பேராதனை பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீட மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஹஷான் கருணாசேன ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

தலவாக்கலை பி.கேதீஸ்

“காற்றை விதைத்தால், சூறாவளியை அறுவடை செய்வீர்கள்” – அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

அமெரிக்க போர்க்கப்பல்கள் ஈரான் பகுதியை நோக்கி நெருங்கியுள்ள நிலையில், தலைநகர் தெஹ்ரானில் உள்ள எங்கெலாப் சதுக்கத்தின் புதிய சுவரோவியம் ஒன்றை ஈரான் அரசு வெளியிட்டது.

அதில், “காற்றை விதைத்தால், சூறாவளியை அறுவடை செய்வீர்கள். எங்கள் நாட்டின் மீது ராணுவத் தாக்குதல் நடத்த முயற்சிக்க வேண்டாம்” என்று அமெரிக்காவிற்கு நேரடி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்கள் ஈரான் பிராந்தியத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் வேளையில், எங்கெலாப் சதுக்கத்தில் உள்ள சுவரோவியத்தில், ஒரு விமானம் தாங்கி கப்பலின் மேல்தளத்தில் சேதமடைந்த மற்றும் வெடித்துச் சிதறிய போர் விமானங்கள் காணப்படுகின்றன.

போர் விமானங்களின் வெடிப்புகள் நட்சத்திர வடிவங்களில் தெரிகின்றன.

அந்தத் தளம் சடலங்களாலும், ரத்தத்தாலும் சேதமடைந்துள்ளது. அந்த ரத்தம் தண்ணீரில் வழிந்தோடி, அமெரிக்க தேசியக் கொடியின் கோடுகளைப் பிரதிபலிப்பது போல் தெரிகிறது. அந்த சுவரோவியத்தில் எழுதப்பட்டுள்ள எச்சரிக்கை வாசகத்தில், ‘நீங்கள் காற்றை விதைத்தால், சூறாவளியை அறுவடை செய்வீர்கள்’ என எழுதப்பட்டுள்ளது.

தெஹ்ரானில் உள்ள இந்த சதுக்கம் பெரும்பாலும் அரசால் ஏற்பாடு செய்யப்படும் கூட்டங்களின் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. அதிகாரிகள் தேசிய நிகழ்வுகளின் அடிப்படையில் சுவரோவியத்தை மாற்றுவார்கள்.

அமெரிக்க விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் மற்றும் அதனுடன் வரும் போர்க்கப்பல்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை மத்திய கிழக்கு பகுதிக்கு வந்தடைந்து ஈரானுக்கு அருகில் உள்ளது என்று இஸ்ரேலின் சேனல் 13 செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஏவுகணை பாதுகாப்புக்காக வடிவமைக்கப்பட்ட அமைப்புகளை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பல் இஸ்ரேலை நெருங்குகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.

டொனால்ட் ட்ரம்ப், “நிறைய கப்பல்கள் தெஹ்ரான் திசையை நோக்கிச் செல்கின்றன என்றும், ஒரு பெரிய கப்பற்படை அந்த நாட்டை நோக்கிச் செல்கிறது” என்றும் கூறியதைத் தொடர்ந்து ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

யாழில் இந்தியாவின் 77ஆவது குடியரசு தினம்

இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை இந்திய துணைத் தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன

இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.

சினிமா

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...

“தனுஷின் நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம்” – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் திகதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு...

இந்​தி​யில் மீண்​டும் நயன்தாரா

0
கார்த்​தி, நாகார்​ஜுனா நடித்த ‘தோழா’, விஜய் நடித்த ‘வாரிசு’ படங்​களை இயக்​கிய​வர் தெலுங்கு இயக்​குநர் வம்சி பைடிபள்​ளி. இவர் அடுத்து இயக்​கும் இந்தி படத்​தில் சல்​மான் கான் நடிக்கிறார். இந்​தப் படத்தை ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா...

செய்தி

தமிழ் இந்துக்களுக்கு ஒரு நீதி; பௌத்தர்களுக்கு வேறு நீதியா?

0
'ஒரே நாடு – ஒரே சட்டம்' என்று கூறும் இந்த அரசில், தமிழ் இந்துக்களுக்கு ஒரு நீதியும், பௌத்தர்களுக்கு மற்றொரு நீதியும் வழங்கப்படுவது எந்த விதத்தில் நியாயம் என்று நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில்...

“அயோத்துல்லா அலி காமேனி தியாகத்தின் விளைவே போர் நிறுத்தம்!” – ஈரான் ஜனாதிபதி

0
மாபெரும் தியாகத் தலைவரான அயத்துல்லா அலி காமேனி சிந்திய ரத்தத்தின் விளைவாகவும், மக்களின் ஒற்றுமை காரணமாகவுமே இந்த போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் தெரிவித்துள்ளார். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: எத்தனை புத்தகங்களை எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது!

0
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவ்வாறான புத்தகங்களை எழுதினாலும் விசாரணைகளை மூடிமறைக்க முடியாது. அவை உரியவகையில் இடம்பெறும்.” – என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்...