playoff சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது சென்னை!

ஐபிஎல் 2026 தொடரின் நேற்றிரவு நடைபெற்ற 48 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணயச்சுழற்சியில் வென்று முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து திணறியது.

டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு, தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் (6) ஆரம்பத்திலேயே வெளியேறி ஏமாற்றமளித்தார்.

எனினும், சஞ்சு சாம்சன் களமிறங்கியது முதலே அதிரடி காட்டி போட்டியை சென்னை பக்கம் திருப்பினார். அவர் 52 பந்துகளில் 87 ஓட்டங்கள் (7 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவருக்கு உறுதுணையாக ஆடிய கார்த்திக் சர்மா 31 பந்துகளில் 41 ஓட்டங்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

சென்னை அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தி, பிளே-ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை மேலும் பிரகாசப்படுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles