தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (14) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளது.
கடந்த வார தரவுகளை ஆராய்ந்த பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் செய்யப்படவுள்ள மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.










