ராஜஸ்தான் அணி வெற்றி!

ஐ.பி.எல். 2026 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை, 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது.

லக்னோவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (22) மற்றும் வைபவ் சூர்யவன்ஷி (8) ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர்.

முகமது ஷமி, மொஹ்சின் கான் மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ராஜஸ்தானை நிலைகுலையச் செய்தனர்.

எனினும், ரவீந்திர ஜடேஜா நிதானமாக ஆடி 29 பந்துகளில் 43 ஓட்டங்களைப் பெற்று கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 159 ஓட்டங்களைப் பெற்றது.

160 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 119 ஓட்டங்களைப் பெற்று, தோல்வி அடைந்தது.

ராஜஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தனது துல்லியமான பந்துவீச்சால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles