ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கிடையாது என்று அக்கட்சியின் உறுப்பினரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
” நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை நாம் எதிர்பார்க்கின்றோம். அந்த வரத்தை மக்கள் வழங்குவார்கள் எனவும் நம்புகின்றோம்.
சிலவேளை, மூன்றிலிரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டால்கூட நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் ஆதரவை பெறமுடியும்.
எனவே, எமது கூட்டணியிலுள்ள தரப்புகளைதவிர, ஏனைய கட்சிகளை இணைத்துக்கொண்டு ஆட்சியமைக்கும் எண்ணம் இல்லை.” – என்றும் கூறினார்.