‘மலையக தமிழர்கள் தலைநிமிர இ.தொ.காவே காரணம்’

மலையக மக்களும், மலையகமும் தலைநிமிர்ந்து செல்வதற்கு வழி வகுத்ததே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்தான் என்பதை எவராலும் மறுக்கவோ – மறக்கவோ முடியாது என்று  இ.தொ.காவின் நிதிச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தின் போது இவ்விடயத்தை சுட்டிக்காட்டினார்.

” மலையக மக்களுக்கு குடியுரிமை,வாக்குறிமை வாங்கி கொடுத்தது முதல் இன்று தனி வீடு திட்டங்களை இந்திய அரசாங்கத்துடன் பேசி பெற்றுக்கொடுத்தது இ.தொ.காவே.

ஆனால் இ.தொ.கா பெற்றுக்கொடுத்த 4000 வீடுகளில் 2000 வீடுகளை கூட கட்டமுடியாதவர்கள் இ.தொ.காவை பற்றி விமர்சிக்க எவ்வித அருகதையும் கிடையாது. இ.தொ.கா மட்டுமே மக்களோடு மக்களாக தோளோடு தோள் கொடுத்து நிக்கிறது.” – என்றார்.

Related Articles

Latest Articles