சஜித் பிரேமதாச தலைமையில் மலையகத்தில் நிச்சயம் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவோம் – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முருகையா ரவிந்திரன் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
இன்று மலையக மக்கள் மாற்றத்தை எதிர்பார்துக் கொண்டே பொதுத் தேர்தலுக்கு முகங்கொடுக்க இருக்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரச உத்தியோகஸ்தர்கள் பணிகளுக்கு செல்லாமல் இருந்த போதிலும் சம்பளம் வழங்கப்பட்டது. ஆனால் தோட்ட தொழிலாளர்கள் தங்களது தொழிலுக்குச் சமூகமளித்தன் பின்னரே ஊதியத்தை பெற்றுக் கொள்ள முடிந்திருந்தது.
பெருந்தோட்ட மக்களின் நன்மைக்கருதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதச பெரும் சேவைகளை செய்திருந்தார். தற்போது அவரது புதல்வன் சஜித் பிரேமதாசவும் அதேவழியில் செயற்பட்டு வருகின்றார். இவரின் ஊடாக மலையக மக்களுக்கு பல்வேறு நலன்தரும் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் என்பதனால் , நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் பெருந்தொகையான வேட்பாளர்களை தெரிவுச் செய்ய வேண்டும்.
ஜீவன் தொண்டமான் எமக்கு எந்த சவாலும் இல்லை. வழமையாக அமரர் ஆறுமுக தொண்டமானுக்கு ஆதரவாக வழங்கப்பட்டு வந்த வாக்குகளை அவர் பெற்றுக் கொள்ளுவார். வேறு எந்த வகையிலும் எமக்கு சவால் ஏற்படாது