Rebuilding Sri Lanka நிதியத்திற்கு பிரதேச அபிவிருத்தி வங்கியினால் 25 மில்லியன் ரூபா நன்கொடை!
டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட உதவிகளாக நன்கொடைகள் கிடைத்து வருகின்றன.
அதன்படி, பிரதேச அபிவிருத்தி வங்கி, 25 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்கியது.
இதற்கான காசோலையை பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் லசந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்தார்.
பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அசந்த தென்னகோனும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.










