” ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே கொழும்பு மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகளைப் பெறுவார்.” – என்று அக்கட்சியின் உப தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் கூடுதல் விருப்பு வாக்குகளை பெறபோவது சஜித்தா, ரணிலா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அத்துடன், ஆளுங்கட்சியுடன் தமது அணிக்கு ‘டீல்’ எதுவும் கிடையாது எனவும், சஜித் அணியே இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுவருகின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன , ஐக்கிய தேசியக்கட்சி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கிடையில்தான் இன்று போட்டி. சஜித் தரப்பின் ஐக்கிய மக்கள் சக்தியை நாம் கட்சியாகவே கருதவில்லை. ” என்றும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டார்.