வீதி விபத்துகள்: 6 மாதங்களுக்குள் நாட்டில் 1,297 பேர் பலி!

இலங்கையில் 2026 ஜனவரி முதல் ஜுன் 16 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் வீதி விபத்துகளால் 1,297 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்துகளில் பாதசாரிகளும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுமே அதிக அளவில் பலியாகியுள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் விவரங்கள்:

பாதசாரிகள்: 448 பேர்

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள்: 444 பேர்

பயணிகள் (Passengers): 124 பேர்

வாகன ஓட்டுநர்கள் (Drivers): 109 பேர்

மிதிவண்டி ஓட்டுநர்கள் (Pedal Cyclists): 85 பேர்

மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் பயணித்தவர்கள் (Pillion Riders): 84 பேர்

இதர சாலைப் பயனாளிகள்: 3 பேர்

உயிரிழந்தவர்களில் பாதசாரிகளும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும் மட்டுமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து கிட்டத்தட்ட 70 சதவீதத்திற்கும் மேல் (892 மரணங்கள்) உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles