மத்திய கிழக்கு மற்றும் டீகோ கார்சியா தீவுகளில் உள்ள அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் இராணுவத் தளங்கள் மீதான ஈரான் தாக்குதலுக்கு ரஷ்யா உளவுத் தகவல்களை வழங்கி உதவியதாக உக்ரைன் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார்.
ரஷ்யாவின் செயற்கைக்கோள்கள் முக்கியமான எண்ணெய் கிணறுகள் மற்றும் பாதுகாப்பு மையங்களை கண்காணித்து அந்தத் தகவல்களை ஈரானிடம் பகிர்ந்ததாக அவர் ஒரு உளவுத்துறை அறிக்கையை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளார்.
ஈரானில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, உக்ரைனின் தற்காப்பு நடவடிக்கைகளை பாதிக்காமல் இருக்க அவர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.
தற்போதைய நிலையில் தனது நாட்டின் இராணுவத்திற்குத் தேவையான எரிபொருள் இருப்பு போதுமானதாக உள்ளது என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.










