கத்தார் முன்னாள் அமீரின் மறைவுக்கு செந்தில் தொண்டமான் இரங்கல்

கத்தார் அரசின் முன்னாள் அமீரான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானியின் மறைவையொட்டி, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கொழும்பிலுள்ள கத்தார் அரசின் தூதரகத்திற்குச் சென்று, இலங்கைக்கான கத்தார் தூதுவர் ஹமத் முகம்மது அல் தோசரியைச் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்தார்.

கத்தார் அரசின் முன்னாள் அமீரும், அந்நாட்டின் நவீன வளர்ச்சிக்கும் உலகளாவிய முன்னேற்றத்திற்கும் முக்கிய பங்களிப்பை வழங்கிய தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவருமான ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி அவர்களின் மறைவு மிகுந்த துயரத்தை அளிப்பதாகக் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மேலும், 2012 ஆம் ஆண்டு ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட் போது, அவருடன் மேற்கொண்ட கலந்துரையாடலையும் செந்தில் தொண்டமான் நினைவூட்டினார்.

ஷேக் ஹமத் பின் கலீபா அல் தானி அவர்களின் மறைவால் துயருறும் கத்தார் அரச குடும்பத்தினருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டதுடன், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதாகவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles