சிங்கப்பூர் பறந்தார் ஷிராந்தி ராஜபக்ச

முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ச, இன்று (16) அதிகாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ( சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான SQ-469 என்ற விமானம் மூலம் அதிகாலை 1.10 மணியளவில் நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

ரோஹிதராஜபக்சவின் மாமியார் திருமதி ஆனி டி லிவேராவும் (Anne de Livera) இந்தப் பயணத்தில் அவருடன் சென்றுள்ளார்.

ஷிராந்தி ராஜபக்ச செப்டம்பர் 24 ஆம் திகதி நிதிப் குற்றப் புலனாய்வுக் கோட்டத்தின் (FCID) முன் ஆஜராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles