தென்னாபிரிக்கா, மே.தீவுகள் இன்று மோதல்!

T20 உலகக்கிண்ணத் தொடரில் இன்று (26) நடைபெறும் முக்கிய போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டி Narendra Modi Stadium மைதானத்தில் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

சூப்பர் 8 சுற்றில் இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.

தென்னாபிரிக்கா அணி இந்தியாவை வீழ்த்தியிருந்தது.

அதேவேளை, மேற்கிந்திய தீவுகள் அணி சிம்பாப்வேயை தோற்கடித்து தன்னம்பிக்கையுடன் உள்ளது.

இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றால், அரையிறுதி வாய்ப்பை நோக்கி இந்திய அணிக்கு சாதகமான நிலை உருவாகும் என்பதால், இந்த மோதல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

Related Articles

Latest Articles