இலங்கையின் உணவு பாதுகாப்பு தொடர்பாக சிறந்த கவனம் எடுக்கும் நாட்டில் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனமான கிரிஸ்புரோ, மத்திய மாகாண தொழில் அமைச்சின் தொழிற் அபிவிருத்தி மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2020 தொழில்முனைவுக்கான விசேட நட்சத்திர விருது வழங்கும் நிகழ்வில் மதிப்பீட செய்யப்பட்டுள்ளது. இதன்போது மத்திய மாகாணத்தின் பெரிய அளவிலான உற்பத்தி பிரிவுகளில் சிறந்த நிறுவனத்திற்கான நட்சத்திர விருதினை கிரிஸ்புரோ குழுமத்தின் இணை நிறுவனமான ஃபாம்ஸ் பிரைட் தனியார் நிறுவனம் பெற்றதுடன் மிட்லன்ட் பிரீடர்ஸ் தனியார் நிறுவனத்திற்கு இந்த பிரிவில் திறன் சான்றிதழும் வழங்கப்பட்டது.
தொழில் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு மேம்பாட்டு திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2020 தொழில்முனைவுக்கான சிறந்த நட்சத்திர விருது வழங்கும் நிகழ்வு பெப்ரவரி மாதம் 12ஆம் திகதி கண்டி கிராண்ட் கண்டி ஹோட்டலில் வைபவ ரீதியாக இடம்பெற்றதுடன் இதன்போது பிரதம அதிதியாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே கலந்து கொண்டார். வருடம் தோறும் ஏற்பாடு செய்யப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்வானது மத்திய மாகாணத்திலுள்ள தொழில்முனைவோரை தேசிய தரத்திற்கு அறிமுகம் செய்யும் பிரதானமான விருது வழங்கும் நிகழ்வாக இது கருதப்படுகிறது. துறைசார் பயணங்கள், நேர்காணல்கள் மற்றும் விளக்கக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களுக்காக விண்ணப்பிக்கும் தொழில்முனைவோர் மதிப்பீடு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இதனை கருத்திற் கொள்ளும் போது அளவீடுகளின் மூலம் நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயற்பாடுகள், நடவடிக்கை நடைமுறைகள் மற்றும் தொழில்முனைவுக்கான தரம் போன்றவையும் கருத்திற் கொள்ளப்படும்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த கிரிஸ்புரோ வர்த்தக குழுமத்தின் மனித வளம் மற்றும் நிர்வாக முகாமையாளர் ரஞ்சன் மஹிந்தசிரி, “கிரிஸ்புரோவின் தொழில்முனைவுக்காக சிறந்த வரவேற்புடன் கூடிய அரச விருதொன்றை இவ்வாறான சவால் நிறைந்த காலத்தில் பெற்றுக் கொள்ளக் கிடைத்தமை குறித்து நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியடைவதோடு இவ்வாறான விருது வழங்கும் நிகழ்வில் பிரதிநிதித்துவம் கிடைத்தமை மூலம் நிறுவனமாக கிரிஸ்புரோவினால் பின்பற்றப்படும் சர்வதேசத்திற்கு உகந்த வரிசை தொடர்பில் புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கும் மற்றும் இந்தத் துறையில் சிறந்த தன்மையான உற்பத்தித் தரத்தை உயர்த்தி வைத்திருத்தல் போன்ற சிறந்த எண்ணங்களை மேம்படுத்துவதே எமது அபிப்பிராயமாகும். அத்துடன் இந்த அரச மதிப்பீட்டின் மூலம் நாம் முன்னேர வேண்டிய பிரிவுகள் குறித்து புரிந்துணர்வு கிடைத்தல் மற்றும் நாம் தற்போது மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் சிறப்பு குறித்தும் உகந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்த இரு காரணிகளும் மிகவும் சிறந்த சுகாதார பாதுகாப்பு தயாரிப்பாக வாடிக்கையாளரின் கைக்கு வழங்க சந்தர்ப்பம் கிட்டும். இந்த விருதுதானது அனைத்து ஊழியர்களினதும் கடும்டட அர்ப்பணிப்பை அடிப்படையாக
க் கொண்டு கிடைத்த ஒரு வெற்றியாக இருப்பதுடன் இந்த வெற்றிக்கு அர்ப்பணித்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அத்துடன் நீண்டகாலமாக கிரிஸ்புரோ தயாரிப்புக்களில் நம்பிக்கை கொண்டுள்ள வாடிக்கையாளர் பெருமக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்தார்.
இலங்கையில் பாரிய கோழி இறைச்சி தயாரிப்பாளர்களான கிரிஸ்புரோவுக்கு இரண்டாவது அரச விருது கிடைப்பதுடன் இதற்கு முன்னர் மனித வலு மற்றும் தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘லக் ரெக்கியா ஹரசர’ விருதினையும் வென்றெடுக்க கிரிஸ்புரோவினால் முடிந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உணவு பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் கிரிஸ்புரோ நிறுவனம் இதனூடாக கிராமிய பொருளாதாரத்தையும் மேம்படுத்துவதற்காக பல்வேறு சமூக பொறுப்புணர்வு பயணத்தின் மூலம் தமது ஒத்துழைப்புக்களை வழங்குகின்றது.
கிரிஸ்புரோ திரி சவிய வேலைத்திட்டத்தின் கீழ் சோளம் மற்றும் நெல் விவசாயிகள் 1200க்கும் மற்றும் சிறிய அளவிலான கோழிப் பண்ணை உரிமையாளர்கள் 250 பேருக்கும் தேவையான தொழில்நுட்ப மற்றும் அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதுடன் அவர்களது உற்பத்திகள் சந்தை விலைக்கு ஏற்ப நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்படுவதனால் இடைத்தரகர்களிடமிருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.
கிரிஸ்புரோ சிசுதிரிய வேலைத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் சேவை செய்யும் அனைத்து ஊழியர்கள் போன்றே அவர்களது பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை அப்பியாசப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுப்பதுடன் பிரதான பரீட்சைகளில் சித்திபெறும் மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படுதல், பல்வேறு துறைகளில் பல்கலைக்கழக படிப்பு மற்றும் தொழில் ரீதியான பயிற்சிகளை முடித்துள்ள இளைஞர் யுவதிகளுக்காக கிரிஸ்புரோ நிறுவனத்தின் மூலம் திறன் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிரிஸ்புரோ சிசுதிரிய வேலைத் திட்டத்தின் மூலம் நடைபெற்ற சித்திரம், நடனம், சங்கீத போட்டிகளுக்காக பங்குபற்றி வெற்றிபெற்ற கிரிஸ்புரோ குடும்பத்திலுள்ள பிள்ளைகள் அவர்கள் வெளிப்படுத்திய திறமைகளுக்கு கிரிஸ்புரோ சிசுதிரிய வருடாந்த வர்ணமயமான நிகழ்ச்சியின் போது மேடையொன்றை அமைத்து அவர்களை கௌரவித்துள்ளது.
மேலும் கிரிஸ்புரோ நிறுவன வர்த்தக நிலையத்தின் அருகிலேயே அமைந்துள்ள பாடசாலைகளுக்காக நூலகங்களை அமைப்பதற்கும் உரிய வளங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கரிஸ்புரோ பிரஜா அருண வேலைத்திட்டத்தின் கீழ் ஊழியர்களுக்காக 34 புதிய வீடுகள் மற்றும் மேலும் 80 வீடுகளை பழுதுபார்த்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹரித்த சத்கார மற்றும் சுவ சத்கார வேலைத்திட்டங்களின் மூலம் சுற்றாடலைப் பாதுகாத்தல் மற்றும் சிறந்த சுகாதாரத்தை மேற்கொள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளது. தேசிய ஒலிம்பிக் கமிட்டியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள Crysbro’s ‘Next Champ’ புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் மூலமும் விளையாட்டில் ஆர்வமுள்ள கிராமிய பிள்ளைகளை ஒலிம்பிக் வரை கொண்டுசெல்வதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1972ஆம் ஆண்டு வெறும் 100 கோழிக் குஞ்சுகளோடு தரமான மற்றும் சிறந்த படைப்புக்களை சந்தைப்படுத்தி மேலோங்கி நிற்கவேண்டுமென்ற விருப்பத்துடன் நிறுவப்பட்ட க்ரிஸ்ப்ரோ நிறுவனம் இலங்கையின் முதல் மற்றும் அதிநவீன முறையில் கோழி இறைச்சியை உற்பத்தி செய்து செங்குத்தாக உயர்ந்திருக்கும் ஒரு நிறுவனமாகும். இலங்கையில் முதலாவதாக அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி முழுமையாக கணினி மயப்படுத்தி (vertically intergrated) தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.தமது கடின உழைப்பின் விளைவாக தற்போது பாரிய பண்ணைகள் மற்றும் தீவன ஆலைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் தாரக மந்திரமான ஷபண்ணையிலிருந்து மேசை கரண்டி வரை| என்ற திட்டமே வெற்றிக்கு காரணியாகும். மேலும் இந்த வெற்றிக்கு நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள், வெளிநாட்டவர்கள், உள்நாட்டு விவசாயிகள் மற்றும் இலங்கையிலுள்ள நுகர்வோர் ளஆகியோரும் காரணமானவர்கள் ஆவர்.