STF துப்பாக்கிச்சூட்டில் ‘பெட்டா மஞ்சு’வின் சகா உயிரிழப்பு!

கனேமுல்ல பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் சந்தேகநபர் ஒருவர் இடையே இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

கனேமுல்ல, சுமேத மாவத்தையில் வீடொன்றை சோதனையிட சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீது சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த சந்தேகநபர் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சந்தேகநபர், கடந்த 9ஆம் திகதி சீதுவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர், இதற்கு முன்னர் பல பாதாள உலகக் குழு நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தன .

சந்தேகநபர் மார்ச் 09 ஆம் திகதி ஜா-எல, தண்டுகம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், துப்பாக்கிதாரியாக செயற்பட்டுள்ளதாக சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ‘பெட்டா மஞ்சு’ எனப்படும் பாதாள உலகக்குழு தலைவரின் நெருங்கிய நண்பராக இருந்ததாக நம்பப்படுகிறது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles