ஓய்வுபெற்ற மஹிந்தவை விமர்சிப்பதைவிடுத்து நாமலுடன் மோதுங்கள்

“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிட்டார். எனவே, அவருடன் மோதுவதைவிடுத்து, அவரது மகன் நாமல் ராஜபக்சவுடன் சொற் சமரில் ஈடுபடுங்கள்.”

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க, ஆளுங்கட்சியினரை வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர் இது தொடர்பில் கூறியவை வருமாறு ,

“ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, பிரதி அமைச்சர் சுனில் வட்டகல நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சிக்கின்றார். ஆனால் வெளியில் மஹிந்த ராஜபக்சவைக் கண்டதும் பதுங்கி , பாசமாக பழகுகின்றார்.

முதுகெலும்பு என ஒன்று இருந்தால் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் அது ஒரேமாதிரி இருக்க வேண்டும். சபையில் சீறுவதும், வெளியில் அடிபணிவதுமாக இருக்கக்கூடாது.

மஹிந்த ராஜபக்ச ஓய்வுபெற்று தற்போது வீட்டில் உள்ளார். அவரை விமர்சிப்பதில் பயன் இல்லை. அவரின் மகன் நாமல் ராஜபக்ச உள்ளார். அவருடன் சொற் சமரில் ஈடுபடுங்கள்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles