சிறைச்சாலை மோதல்: இன்று கூடுகிறது விசாரணை குழு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்குழு, இன்று (09) கூடவுள்ளது.

மேற்படி மோதல் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஜனாதிபதி செயலாளர் நந்திக சனத் குமநாயக்கவினால், அமைச்சரவையின் ஒப்புதலுடன் இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவிற்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ தலைமை தாங்குகிறார். மிலிந்த குணதிலக மற்றும் மோகன் வீரக்கோன் ஆகியோர் இதன் ஏனைய உறுப்பினர்களாவர்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறைக் கலவரத்தைத் தொடர்ந்து இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து, தனது கண்டுபிடிப்புகளை அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பணி இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles