காடுகளுக்கு தீ வைக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திம பானகும்புர எச்சரித்துள்ளார்.
வறட்சியான காலநிலைக்கு மத்தியில், நாட்டில் காட்டுத்தீ சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலேயே காட்டுத்தீ சம்பவங்கள் அதிகமாக பதிவாகியுள்ளதாக வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் சந்திம பானகும்புர தெரிவித்துள்ளார்.
காடுகளுக்கு தீ வைக்கும் நபர்கள் குறித்த தகவல்களை 1995 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வன பாதுகாப்பு மற்றும் தீ கட்டுப்பாட்டிற்காக இவ்வாண்டிற்கான நிதி ஒதுக்கீட்டில் கணிசமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.










