அக்கரபத்தனை பகுதியில் குரங்கு தொல்லை!

அக்கரப்பத்தனை பிரதேசத்தில் குரங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இதனால் வாகன சாரதிகள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோர்கள் பல்வேறு சிரமங்களையும் அச்சநிலையையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

வீதிகளை திடீரென கடக்கும் குரங்குகள் காரணமாக வாகன விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.

மேலும் வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பாடசாலை வளாகங்களுக்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

எனவே பெற்றோர்கள் தங்களின் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவதுடன், பொதுமக்களும் உணவுப் பொருட்களை வெளியில் திறந்தவாறு வைக்காமல் பாதுகாப்பாக செயல்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு உடனடி மற்றும் நிரந்தர தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Related Articles

Latest Articles