தேசிய விருதுகளை அள்ளிய தமிழ்ப் படங்கள்

ஆண்டுதோறும் மத்திய அரசு, தேசிய திரைப்பட விருதுகள் வழங்கி, திரைக்கலைஞர்களை கெளரவித்து வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான 72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படத்துக்கு, 2024-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி நடிப்பில் வெளியான ‘அமரன்’ படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

1.‘அமரன்’ படத்துக்காக ராஜ்குமார் பெரியசாமிக்கு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

2.அதே படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது, ஜி.வி.பிரகாஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே ‘சூரரைப் போற்று’, ‘வாத்தி’ படங்களுக்காக ஜி.வி.பிரகாஷ் தேசிய விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

3. சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய விருதை ‘அமரன்’ திரைப்படத்துக்காக கலைவாணன் வென்றுள்ளார்.

தமிழ்த் திரைப்படங்களில் ‘மகாராஜா’ படத்துக்காக அனல் அரசு-க்கு சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த உறுதுணை நடிகைக்கான விருது ‘மகாராஜா’ படத்தில் நடித்த சச்சனா நமிதாஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதை அவர் ‘மித்யா’ கன்னடப் படத்தில் நடித்த ரோபஸ்ரீ வர்கடி உடன் பகிர்ந்து கொள்கிறார்.

சிறந்த சமூக அக்கறையுடனான படைப்புக்கான தேசிய விருது, அருண் மாதேஸ்வரன் இயக்கத்தின் தனுஷ் நடித்த ‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘மெய்யழகன்’ படத்துக்கு சிறந்த ஒலிக்கலவைக்கான சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘புஷ்பா 2’ படத்துக்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான தேசிய விருது தீபாலி நூர், ஷீத்தல் சர்மாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

’பிரம்மயுகம்’ படத்தில் நடித்த நடிகர் மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சந்து சாம்பியன்’ படத்துக்காக கார்த்திக் ஆர்யனுக்கும் சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஆர்ட்டிகிள் 370’ படத்தில் நடித்த யாமி குப்தாவுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

‘கல்கி 2989 ஏடி’ படத்துக்கு சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles