மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு
இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் சபரகமுவ மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் அவர்களின்
பங்குபற்றுதலுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று
இன்றைய தினம்(27/03/2026) இடம் பெற்றிருந்தது.
இக் கலந்துரையாடலில் பெருநதோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம்பிரதீப் கலந்து கொண்டிருந்தார்.
இதன் போது பிரதி அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,
” மலையகத்தில் உள்ள சகல பொலிஸ் நிலையங்களிலும் வெகு விரைவில் தமிழ் அதிகாரிகளை நியமிக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்த நிலையிலே அமைச்சர் ஆனந்த் விஜயபால இப் பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் அதிகாரிகளை வெகு விரைவில் பெற்று தருவதாக உறுதியளித்திருந்தார்.
அத்தோடு மலையக பகுதியில் உள்ள சட்ட விரோத மதுபானங்கள், மதுபான உற்பத்திகளை முழுமையாக தடை செய்வதற்கு விசேட வேலை திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் பிரதி அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்திருந்தார்.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.










