இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கிடையில் 10 நாள் தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.
இரு தரப்பிற்கும் இடையே நிலவும் மோதல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பத்து நாட்கள் அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ளமை அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
எல்லையில் நிலவும் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்ட மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
இந்த இடைக்கால ஏற்பாடு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்கவும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்காலிக போர் நிறுத்தத்தை ஆஸ்திரேலியா வரவேற்றுள்ளது. நிரந்தர அமைதி நிலவ வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
