பசறை வலய பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற இருபது வயதிற்குட்பட்ட கிரிக்கெட் போட்டியில், 2026 ஆம் ஆண்டிற்கான சாம்பியன் பட்டத்தை பசறை தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் பின்னணியில் மாணவர்களின் விடாமுயற்சி மற்றும் ஒற்றுமையான அணிச் செயல்பாடு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
குறிப்பாக, தற்காலிக இணைப்பின் கீழ் குறுகிய காலத்திற்குள் மாணவர்களை திறம்பட பயிற்றுவித்து போட்டிக்குத் தயாராக்கிய விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் பிரசன்னாவின் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கதாகும்.
இந்நிகழ்வை முன்னிட்டு, பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் ஆகியோர் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், எதிர்காலத்திலும் இதே உற்சாகத்துடன் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் சாதனைகள் படைக்க வேண்டும் என வாழ்த்தினர்.
– நடராஜா மலர்வேந்தன்
