“நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைநிறுத்தப்படும்போது – சட்டம் அமுலாகும்போது திருடர்கள் அச்சம் அடைந்து, நடுக்கத்தில் கூட்டம் நடத்துகின்றனர். அரசாங்கத்துக்கு சவாலை ஏற்படுத்தலாம் எனக் கனவு காண்கின்றனர்.” – என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி என்பது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கமாகும். எனவே, எவராலும் ஆட்சியை அசைக்க முடியாது. இது விடயத்தில் மக்கள் தெளிவாக உள்ளனர்.
இந்நாட்டில் இனி ஆட்சி மாற்றம் இடம்பெறுமானால் தேசிய மக்கள் சக்தியைவிட, சிறப்பானதொரு கட்சி வந்தால் மட்டுமே சாத்தியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.










