போரின் வேகம் குறையாது: 4 வாரங்களுக்கு நீடிக்கும்!

ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை இன்னும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் பரப்பளவு மற்றும் தற்போதைய இ ராணுவ நிலைவரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த காலக்கெடுவைத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தத் தாக்குதல்கள் தற்காலிகமானவை அல்ல என்றும், அமெரிக்காவின் அனைத்து இலக்குகளும் எட்டப்படும் வரை போரின் வேகம் குறையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி உட்பட 48 முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இது தாங்கள் எதிர்பார்த்ததை விடப் மிகப்பெரிய வெற்றி எனவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், இந்தப் போரில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளதை அவர் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர்கள் மிகச்சிறந்த வீரர்கள் என்று புகழாரம் சூட்டிய ட்ரம்ப், போர்க்களத்தில் இத்தகைய உயிரிழப்புகள் துரதிர்ஷ்டவசமானவை எனினும் தவிர்க்க முடியாதவை என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles