இலங்கையில் மீண்டும் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நுகர்வோர் மத்தியில் ஏற்பட்டுள்ள அசாதாரண கேள்வி மற்றும் சட்டவிரோதப் பதுக்கலைக் கட்டுப்படுத்தி, இருப்பிலுள்ள எரிபொருளைச் சீராக நிர்வகிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி, இலங்கையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஞசு குறியீட்டு முறைமை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு வாராந்தம் ஒதுக்கப்பட்ட எரிபொருள் அளவு
வாகன வகைகளுக்கான எரிபொருள் அளவுகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
1. பேருந்துகள் – 60 லீற்றர்
2. மோட்டார் சைக்கிள் – 5 லீற்றர்
3. வேன் – 40 லீற்றர்
4. மோட்டார் கார் – 15 லீற்றர்
5 லொறி – 200 லீற்றர்
6.வாகனங்கள் (Land Vehicles) – 25 லீற்றர்
7. முச்சக்கர வண்டி – 15 லீற்றர்
8. விசேட பயன்பாட்டு வாகனம் – 40 லீற்றர்
9. குவாட்ரிசைக்கிள் (Land Vehicles) – 5 லீற்றர்
ஏற்கனவே QR குறியீட்டிற்கு பதிவு செய்துள்ள வாகன உரிமையாளர்கள், தங்களது வாகன உரிமையும் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணும் மாற்றமில்லையெனில், 2026 மார்ச் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் “Vehicle Login” பகுதியின் மூலம் தங்களது QR குறியீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.
வாகன உரிமை அல்லது பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண் மாற்றமடைந்திருந்தால், அவர்கள் 2026 மார்ச் 15 ஆம் திகதி காலை 6.00 மணி முதல் மீண்டும் இணையதளத்தின் “Vehicle Registration” பகுதியின் மூலம் புதிதாக பதிவு செய்ய வேண்டும்.
அதேபோல், இதுவரை QR குறியீட்டிற்கு பதிவு செய்யாதவர்கள் மற்றும் புதியதாக பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் 2026 மார்ச் 15 காலை 6.00 மணி முதல் fuelpass.gov.lk இணையதளத்தின் மூலம் பதிவு செய்து QR குறியீட்டை பெற முடியும்.
