ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரையும் பலியெடுத்த ‘போர்’!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன நடத்திய தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் Kamal Kharrazi உயிரிழந்துள்ளார்.

ஈரான் ஊடகங்கள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்று வெளியாகியுள்ளன.

ஏப்ரல் முதலாம் திகதி தெஹ்ரானில் உள்ள அவரது வீடுமீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையிலேயே தற்போது அவரும் உயிரிழந்துள்ளார்.

1997 முதல் 2005 வரை ஈரான் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றியதோடு, ஈரானின் உச்ச தலைவருக்கு ஆலோசகராகவும் மற்றும் மூலோபாயக் குழுவின் தலைவராகவும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

ஈரானிய அரசியலில் ஒரு சீர்திருத்தவாதப் போக்கைக் கொண்ட தலைவராக இவர் பரவலாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles