கொழும்பு மாதம்பிட்டிய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகநபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கொலை டிக்டொக் தகராறினால் ஏற்பட்டது என முன்னதாக தகவல்கள் வெளியாகிய போதிலும், இது டிக்டொக் தகராறு இல்லை என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில் பாடசாலை மாணவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கிராண்ட்பாஸ் – மாதம்பிட்டிய பகுதியில் 17 வயதான இளைஞர் கடந்த 3 ஆம் திகதி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டார்.
தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார்.
இளைஞர்கள் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் வலுப்பெற்றதால், இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.










