இன்றைய வானிலை!

இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள வழுவடைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் அதே பகுதியில் நீடித்து வருகின்றது. இதன் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் பல பகுதிகளில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கடற்பிராந்தியங்களில், காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதன் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் வரும் நாட்களில் அதிகரிக்கக்கூடும்.

காற்று மேற்கு திசையிலிருந்தோ அல்லது திசை மாறியோ வீசக்கூடும். காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 25-35 கிலோமீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதி அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடல் பகுதிகள் மிதமான நிலையில் இருக்கும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும். எனவே, கடற்படை மற்றும் மீனவச் சமூகத்தினர் இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வழங்கும் அறிவிப்புகளைக் கவனிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles