TRC என்பது ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமா?

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவென்பது படையினரை பலிகடாவாக்கும் பொறிமுறை அல்ல. அதேபோல ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்துடைப்பு நாடகமும் அல்ல, எமது பிரச்சினையை நாமே தீர்க்க கூடிய வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்குதலாகும் – என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை அறிமுகப்படுத்தும்போது அதற்கு இரு தரப்பினர் எதிர்ப்பை வெளியிடுகின்றனர். எவ்வித பிரச்சினைக்கும் தீர்வை தேட விரும்பாத தெற்கில் உள்ள ஒரு தரப்பும், சர்வதேசத்தில் உள்ள டயஸ்போராக்களுமே இவ்வாறு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இது பொய் எனவும், ஜெனிவாவை ஏமாற்றுவதற்கான கண்காணிப்பு நாடகம் எனவும் டயஸ்போராக்கள் கூறுகின்றனர், இது படையினரைக் காட்டிக்கொடுக்கும் செயல் என தெற்கில் குறிப்பிடுகின்றனர். அவ்வாறு எதுவும் இல்லை.

எமது நாட்டுக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இரு தீர்மானங்கள் உள்ளன.  இலங்கையில் இடம்பெற்றவை எனக் கூறப்படும் சிற்சில சம்பவங்கள் தொடர்பில் அவர்கள் தனியாக சாட்சியங்களை திரட்டி, வழக்கு தொடுக்ககூடும்.  இலங்கையில் நீதியை எதிர்ப்பார்க்க முடியாது என்பதாலேயே இந்நடவடிக்கை என அவர்கள் கூறுகின்றனர்.

உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஊடாக நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய வகையிலான பொறிமுறையை இலங்கையில் உருவாக்க முடிந்தால், தென்னாபிரிக்காவில் போன்று அந்த ஆணைக்குழு முன்னிலையில் போரால் பாதிக்கப்பட்ட அனைத்து இன மக்களும் தமது கதைகளைக் கூறலாம். உள்நாட்டில் தீர்வை நோக்கி பயணித்தால் சர்வதேச தலையீடுகளை தவிர்த்துக்கொள்ளலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பதிலை வழங்கமுடியும்.  இதனை அடைவதே இதன் நோக்கம்.

பிள்ளைகள் காணாமல்போய் இருந்தால் ஒன்று தேடி கொடுக்க வேண்டும், இல்லையேல் காரணம் கூற வேண்டும்.  இழப்பு நடந்திருந்தால் இழப்பீடு வழங்க வேண்டும்.இருண்ட யுகத்தில் தொடர்ந்து வாழ முடியாது. இருண்ட யுகத்தில் இருந்து மீள வேண்டும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவினால் போரால் தமிழர்கள் மட்டும் அல்ல ஏனையோரும் பாதிக்கப்பட்டனர் என்பது தெரியவரும். படையினரை பலிகடாவாக்குவதோ, ஜெனிவாவை ஏமாற்றுவதோ அல்ல, எமது பிரச்சினையை நாமே தீர்க்ககூடிய பொறிமுறையை உருவாக்குவதே இதன் நோக்கம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles