ஈரானிடம் இழப்பீடு கோருகிறார் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையை திறப்பதில் சிக்கல்!

கடந்த பல தசாப்தங்களாகக் கொ#ல்#லப்பட்ட ஆயிரக்கணக்கான அமெரிக்கப் படையினருக்கும், ஈரானியப் பொதுமக்களுக்கும் ஈரான் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான், காசா மற்றும் லெபனான் ஆகிய பகுதிகளில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி முயன்று வரும் வேளையில், ஈரானுக்கு அவர் விடுத்துள்ள கூடுதல் கோரிக்கைகள் தெஹ்ரானில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும்.

‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப்,
ஐந்து மாதப் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் நஷ்டஈடு கோரியதற்குப் பதிலடியாகவே, தானும் போர் இழப்பீட்டைக் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த 50 ஆண்டுகளில் ஈரான் அரசால் கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான அப்பாவிப் போராட்டக்காரர்களின் குடும்பங்களுக்கும், கடந்த ஐந்து மாதங்களில் கொல்லப்பட்ட 52,000 பேரின் குடும்பங்களுக்கும் ஈரான் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான மீது கூட்டுத் தாக்குதல்களை நடத்துவதற்கு முன்பு, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20% கடந்து சென்ற ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதை நோக்கமாகக் கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தையில், ஈரானிய தலைவர்களுக்கு இக்கோரிக்கைகள் ஏ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே அமையும்.

அமைதி ஒப்பந்தம் விரைவில் சாத்தியமாகும் என டிரம்பும் பிற சிரேஷ்ட பேச்சுவார்த்தையாளர்களும் பலமுறை கூறியபோதிலும், இதுவரை எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, மத்திய கிழக்கு மோதல்களை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் எடுத்த முயற்சிகளுக்குத் தொடர்ச்சியாக ஏற்பட்ட பின்னடைவுகளைத் தொடர்ந்தே இக்கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

Related Articles

Latest Articles