அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு வெனிசுலாவில் தேர்தலில் போட்டியிடப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே அவர் நகைச்சுவை கலந்த தொனியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சிறை பிடிக்கப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் எண்ணெய் வர்த்தக உறவுகள் வலுவடைந்துள்ளது எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வெனிசுலா மக்கள் தன்னை ஒரு விடுதலை வீரராகக் கருதுவதாகவும், அங்கு தனக்குச் சிலை வைக்கும் அளவிற்கு வரவேற்பு இருப்பதாகவும் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
Trump: "Actually, I'm the highest polling person. After the presidency, I may go to Venezuela and run against Delcy. I may run against Delcy. They like me in Venezuela." pic.twitter.com/YiMj6JjVVD
— Aaron Rupar (@atrupar) March 26, 2026
