அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சீன பயணத்துக்குரிய திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய எதிர்வரும் மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளில் அவரது சீன விஜயம் இடம்பெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
சீன ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்துவதற்காக அந்நாட்டுக்கு செல்வதற்கு ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.
எனினும், ஈரான்மீதான போர் நடவடிக்கை காரணமாக அவ்விஜயம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையிலேயே சீன ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு திகதி தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் சீன விஜயமானது இரு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளை மேம்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.










