3 வயதில் மன்னர்… 34 வயதில் மரணம்! உலகின் இளம் மன்னருக்கு சோகமான முடிவு

மூன்று வயதிலேயே அரியணை ஏறி, உலகின் மிக இளம் வயது ஆட்சி மன்னர் என்ற பெருமையைப் பெற்ற உகாண்டாவின் டூரோ இராச்சிய மன்னர் ஒயோ நியிம்பா கபாம்பா இகுரு ருகிடி, தனது 34வது வயதில் காலமானார்.

குழந்தைப் பருவத்திலேயே ஒரு இராச்சியத்தின் பொறுப்பை ஏற்ற அவர், தனது வாழ்நாள் முழுவதும் டூரோ மக்களின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் சமூக முன்னேற்றத்துடன் இணைந்திருந்தார்.

அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது மரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

உகாண்டா ஒரு குடியரசு நாடாக இருந்து, தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படும் அரச தலைவரால் நிர்வகிக்கப்பட்டாலும், காலனித்துவத்திற்கு முந்தைய காலத்திலிருந்து இருந்து வந்த சில பாரம்பரிய இராச்சியங்கள் அந்நாட்டில் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு நேரடி அரசியல் அதிகாரம் அதிகமாக இல்லாவிட்டாலும், சமூக மற்றும் கலாசார ரீதியில் பெரும் செல்வாக்கு உள்ளது.

மேற்கு உகாண்டாவில், கொங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள டூரோ இராச்சியத்தின் மன்னராக ஒயோ நியிம்பா இருந்து வந்தார்.

ஒயோ நியிம்பாவின் தந்தையான மன்னர் ருகிரபசைஜா பற்றிக் டேவிட் மெத்தியூ கபோயோ ஒலிமி மூன்றாம் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 1995 செப்டம்பர் 12ஆம் தேதி வெறும் மூன்று வயதில் அவர் மன்னராக முடிசூட்டப்பட்டார். இதன் மூலம் அப்போது உலகின் மிக இளம் வயது ஆட்சி மன்னராக அவர் அறியப்பட்டார்.

மிக இளம் வயதில் தொடங்கிய ஒரு மன்னரின் பயணம், 34 வயதிலேயே முடிவுக்கு வந்திருப்பது உகாண்டா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles