மத்திய கிழக்கில் நிலவும் போரை உடன் முடிவுக்கு கொண்டுவருமாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த மோதலால் ஏற்படும் கடுமையான பொருளாதார பாதிப்புகள் மற்றும் மக்களின் சொல்லொணாத் துயரங்கள் குறித்து ஐ.நா. செயலாளர் கடும் கவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, அமைதியை நிலைநாட்ட தனது சிறப்புத் தூதரை மத்திய கிழக்குக்கு அனுப்புவதற்கு அவர் உத்தேசித்துள்ளார்.
