வெனிசுலா நிலநடுக்கம் – உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மீட்பு பணி தீவிரம்

வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க சர்வதேச மீட்புக் குழுவினர் மற்றும் அண்டை நாடுகள் தீவிரமாக உதவி வருகின்றன.

அமெரிக்கா, பிரேசில் மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகள் நிவாரணப் பொருட்கள் மற்றும் மருத்துவக் குழுக்களை அனுப்பி தங்களது ஆதரவை வழங்கியுள்ளன.

நீண்டகால பொருளாதார நெருக்கடியால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் மருத்துவமனை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் இந்த பேரிடரை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.

தலைநகர் கராகஸ் மற்றும் லா குவைரா பகுதிகளில் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்துகளை வழங்கவும் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.

589 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles