வெற்றி தமிழகம் – தவெக அரசின் முதல் பட்ஜட் நாளை முன்வைப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதலாவது வரவு- செலவுத் திட்டம் நாளை (05) முன்வைக்கப்படுகின்றது.

இதற்கமைய தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட் நாளையும், வேளாண் பட்ஜெட் நாளை மறுநாளும் தாக்கல் செய்யப்படுகின்றன.

மக்களைக் கவரும், குறிப்பாகப் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் புதிய திட்டங்களை பாதீட்டில், தவெக அரசாங்கம் உள்வாங்கி இருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக சட்டப்பேரவை ஆகஸ்ட் ஆம் திகதிகூடும் என்று பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் கடந்த ஜூலை 21-ம் திகதி அறிவித்தார்.

அதன்படி, நடப்பு நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் நாளை (ஆக.5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் வினோத் நாளை மறுநாள் (ஆக.6) தாக்கல் செய்ய உள்ளார்.

‘வெற்றித் தமிழகம்’ என்ற பெயரிலான அரசின் ஐந்தாண்டு தொலைநோக்கு திட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வட்டியில்லா கடனுதவி, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டுவர நடவடிக்கை, மாணவர்கள் உயர் கல்விக்கு பிணையின்றி ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறக் கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles