விஜித ஹேரதஅடுத்த மாதம் ரஷ்யா பயணம்

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அடுத்த மாதம் ரஷ்யாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எரிபொருள், நிலக்கரி மற்றும் உரம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வது குறித்து பேச்சு நடத்துவதற்காகவே அவர் மாஸ்கோ செல்கின்றார்.

ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் அன்ட்ரே ருடென்கோ மற்றும் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் ஆகியோர் கடந்த வாரம் கொழும்புக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

அவர்கள் ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விஜித ஹேரத்தின் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

ரஷ்யாவில் இருந்து எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles