அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டுப்படை மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் இன்று 13 ஆவது நாளாக தொடர்கின்றது.
ஈரான் தனது எல்லையை ஒட்டிய ஹார்முஸ் நீரிணையை
ஏற்கெனவே முடக்கியுள்ளது. அவ்வழியாக செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளது.
இதனால் ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை மிதக்கவிடும் ஈரானின் திட்டத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் 16 ஈரானிய கண்ணிவெடி கப்பல்களை தங்கள் படைகள் மூழ்கடித்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஹார்முஸ் நீரிணை
யை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியாக ஈரான் கண்ணி வெடிகளை மிதக்கவிடத் தொடங்கியிருப்பதாக உளவுத்துறையினர் கூறியதாக அமெரிக்க ஊடகமான சிஎன்என் நேற்று முன்தினம் தெரிவித்தது.
