அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் விதிக்கப்பட்ட 48 மணிநேர காலக்கெடுவை ஈரான் நிராகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஹார்முஸ் நீரிணையை திறக்க அல்லது புதிய உடன்படிக்கையை எட்ட 48 மணிநேரக் கெடுவை விதித்துள்ளார்.
இந்த காலக்கெடுவிற்குள் இணங்காவிட்டால் அந்நாட்டின் முக்கியக் கட்டமைப்புகளைத் தகர்த்து, கடுமையான ராணுவத் தாக்குதலை நடத்தப்போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
இந்த மிரட்டலை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்ததோடு, டிரம்பின் கருத்தை அறிவற்ற செயல் என்றும் விமர்சித்துள்ளது.
அமெரிக்காவின் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சப்போவதில்லை என்றும், இதற்குப் பதிலடியாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.










