பவள விழா பாப்பாவுக்கு என்ன தெரியும்? தி.மு.கவை விளாசித்தள்ளிய விஜய்!

“அரசியலில் தங்களை யார் எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே திமுகவின் வேலை” என்று தவெக 3-ம் ஆண்டு தொடக்க விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.

தவெக ஆரம்பித்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்று, மூன்றாம் ஆண்டு இன்று தொடங்கும் நிலையில், சென்னை பனையூரில் உள்ள அக்கட்சியின் தலைமை நிலையத்தில் 3-ம் ஆண்டு தொடக்க விழா நடந்தது.

முன்னதாக கட்சி வளாகத்தில் கட்சிக் கொடியை ஏற்றிவைத்த விஜய், தவெக கொள்கைத் தலைவர்களின் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து விஜய் தவெகவினர் மத்தியில் பேசியதாவது:

” காமராஜர், எம்ஜிஆர், அண்ணா இருந்த இடத்தில் இப்போது இவர்களும் இருக்கிறார்களே என்று தமிழக மக்கள் திமுகவைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர்.

தமிழகத்தில் புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் திமுக அவர்களைப் பார்த்து உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கிறது? என்று கேள்வி கேட்கும்.

எம்ஜிஆருக்கு அரசியல் அரிச்சுவடி தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். காமராஜருக்கு இலக்கியம் தெரியுமா? என்று கொந்தளித்தனர். இன்று நம்மைப் பார்த்துக் கொந்தளிக்கின்றனர். அரசியலில் யார் அவர்களை எதிர்த்து நின்றாலும் கொந்தளிப்பதே திமுகவின் வேலை.

இத்தனையையும் மீறி தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக தவெக இன்று வளர்ந்திருக்கிறது. அதனால், டெக்னாலஜி வளர்ந்திருக்கும் சூழலில் விமர்சனங்களில் உங்கள் (திமுக) டெக்னிக்கையாவது மாற்றுங்கள்.

அதைவிடுத்து 50 வருடங்களுக்கு முந்தைய தகர டப்பாவை எடுத்து உருட்டுகிறார்கள். ‘பவள விழா பாப்பாவுக்கு’ வேறென்ன தெரியும். பழைய டப்பாவை உருட்டத்தானே தெரியும்.

ஆனால், அதற்காக எல்லாம் அவர்கள் செய்யும் தவறுகளை, ஊழல்களை சொல்லிக் காட்டாமல் இருக்க முடியாது. மக்களுடைய ஒரே பிரதிநிதி தவெக மட்டும்தான். திமுகவை தொடர்ந்து நாம் விமர்சனம் செய்வோம்.

இந்த டிஜிட்டல் உலகில் திருவள்ளுவர் இருந்திருந்தால், இந்த தீய சக்தியை பற்றி, ”அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு” என்று திருக்குறள் எழுதியிருப்பார்.

தமிழக தேர்தல் களத்தில் மும்முனைப் போட்டி, நான்குமுனை போட்டி என்றெல்லாம் சொல்கிறார்கள். அவர்களுக்கு நான் சொல்கிறேன். இங்கே மாபெரும் மக்கள் சக்தி கூட்டணி, திமுக கூட்டணி, பாஜக தலைமையில் மற்றும் பலர் கூட்டணி தான் இருக்கிறது. இதில், திமுகவை வீழ்த்த மாபெரும் மக்கள் சக்தியான தவெகவால் மட்டும் தான் முடியும்.

அப்புறம், “ஏய் விஜய், வீட்டைவிட்டு வெளியில் வா…” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள் பாஸ். தேர்தல் தேதியில் தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டில் இருக்கும் ஒவ்வொரு விஜய்யும் வாக்காளர் அடையாள அட்டையுடன் காலையிலேயே பூத் பூத்தாக வந்து நிற்பார்கள். அன்றைக்கு ‘ஏன் விஜய்யை கூப்பிட்டோம்’ என்று நீங்கள் நினைப்பீர்கள்.

நான் என்ன பேசினாலும் ‘இது என்ன சினிமாவா?’ என்று ஆரம்பித்துவிடுகிறார்கள். நானே சினிமாவை விட்டுவிட்டேன். ஆனால் அவர்கள் அதை விடுவதாக இல்லை.

தேர்தலை ஒட்டி சில கருத்துக் கணிப்புகள் வருகின்றன. அவற்றில் சில சரியாகவும் இருக்கின்றன. கூடவே சில ‘கடுப்புக் கணிப்புகள்’ வருகின்றன. அந்த கடுப்புக் கணிப்பாளர்களுக்கு நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஒவ்வொரு வீட்டிலும் தவெக இருக்கிறது. இதை நம்பவில்லை என்றால் நீங்கள் எடுத்த கடுப்புக் கணிப்பை ரப்பர் வைத்து அழித்துவிட்டு மீண்டும் எடுத்துப் பாருங்கள். அப்போதும் தவெக பற்றி அதே ரிசல்ட் தான் வரும். தவெக எல்லோரது வீட்டிலும் இருக்கிறது. இவ்வாறு விஜய் பேசினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles