கிண்ணம் யாருக்கு? நாளை தீர்க்கமான போட்டி!

நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான T20 தொடரில் வெற்றிவாகை எந்த அணிக்கு என்பதை தீர்மானிக்கும் இறுதி போட்டி நாளை (25) நடைபெறவுள்ளது.

தென்னாபிரிக்கா அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது.

3 போட்டிகள் முடிந்த நிலையில் நியூஸிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் 4-வது T20 போட்டி வெலிங்டனில் நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 165 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூஸிலாந்து அணி 18.5 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து.

இதன் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனால் டி20 தொடர் தற்போது 2-2 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி T20 போட்டி நாளை 25-ம் திகதி கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles