ஐபிஎல் தொடரில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு எம்.சின்னசாமி மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும்.
ரஜத் பட்டிதார் தலைமையிலான நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணி 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுபட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.
கடைசியாக அந்த அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தது.
ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணியின் பேட்டிங் வரிசை இன்னும் முழுமையான ஃபார்மிற்கு வரவில்லை.
4 போட்டிகளில் விளையாடி உள்ள ரிஷப் பந்த் 130 ஸ்ட்ரைக்ரேட்டில் வெறும் 103 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
மிட்செல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் போன்ற நட்சத்திர வீரர்களும், ஆயுஷ் பதோனி மற்றும் அப்துல் சமத் போன்ற இளம் வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் முகுல் சவுத்ரி அதிரடியாக விளையாடி வெற்றி தேடிக் கொடுத்திருந்தார். ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசியாக விளையாடி ஆட்டத்தில் முகுல் சவுத்ரி 14 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே சேர்த்து ஏமாற்றம் அளித்தார்.
அணியின் வெற்றிக்கு உதவவேண்டுமெனில் அவர் சீரான வேகத்தில் ரன்களைக் குவிக்க வேண்டியது அவசியம்.
