ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது இரு ஆட்டங்களில் லக்னோ, மும்பை அணிகளை தலா 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
இந்த இரு ஆட்டங்களிலும் சமீர் ரிஸ்வி அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்திருந்தார்.
கடைசியாக டெல்லி அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ஒரு ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. இதில் இருந்து மீண்டு வெற்றி பெறுதவற்கான முயற்சியை டெல்லி அணி எடுக்கக்கூடும்.










