“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு முயற்சி எடுக்கப்படுகின்றது.”
இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஓர் அங்கமாகவே அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்ட சஹ்ரான் போன்ற ஒருவர், தீவிர சிங்கள பௌத்தராக அறியப்படும் கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க தனது உயிரைத் தியாகம் செய்வார்களா? ” என்று விமல் வீரவன்ச கேள்வி எழுப்பினார்.
மேற்படி தாக்குதல்களின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
“சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாக சாலே மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
புலனாய்வுத்துறை அதிகாரிகள் சஹ்ரான்கள் மற்றும் பிரபாகரன்களுடன் மட்டுமல்ல, அனைவருடனும் தொடர்பு கொள்கிறார்கள்.
தீவிரவாத நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தவுடன் சஹ்ரானை கண்காணிக்கத் புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்தது.” எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.










